பிரதர் டைட்டில் இப்படிதான் வந்துச்சு… ஆடியோ ரிலீஸில் உண்மையை உடைத்த ஜெயம்ரவி

Brother :ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து உருவாகி வரும் பிரதர் திரைப்படத்தின் டைட்டில் குறித்த ஆச்சரிய தகவல்களை இசை வெளியீட்டு விழாவில் அவர் கூறி இருப்பது வைரலாகி வருகிறது.

குடும்பத்தை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் பிரதர். இப்படத்தை ராஜேஷ் எழுதிய இயக்க ஜெயம் ரவி, பூமிகா, பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கிய இடத்தில் நடித்திருக்கின்றனர். ஹரிஷ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

தீபாவளியை முன்னிட்டு இத்திரைப்படம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. முழுக்க முழுக்க அக்கா மற்றும் தம்பி என இருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி வருகின்றனர். முதலில் இப்படத்திற்கு என்ன டைட்டில் வைக்கலாம் என பெரிய குழப்பம் பட குழுவிடம் இருந்ததாம்.

அது குறித்து ஜெயம் ரவி மற்றும் ராஜேஷ் பேசிக் கொண்டிருக்கும்போது பூங்காவனம் என பல பெயர்கள் பரிசீலனையில் இருந்திருக்கிறது. ஆனால் அது செட்டாகாமல் போக ஹீரோயிக்கை மையமாக வைத்து பெயர் வைக்கலாமா என ஜெயம் ரவி கேட்டிருக்கிறார்.

ஆனால் இது குடும்ப கதை என்பதால் அது இப்படத்திற்கு செட்டாகாது. அப்புறம் என்ன பிரதர் பேர் வைக்கலாம் என ஜெயம் ரவி கேட்க இதையே வைக்கலாமே என ராஜேஷ் கூறியிருக்கிறார். பிரதர் என்ற பெயர் அப்படித்தான் படத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.

டைவர்ஸ் அறிவிப்புக்கு பின்னர் ஜெயம் ரவியின் முதல் பெரிய விழா என்பதால் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்து இருக்கிறது. இன்று படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.ஏற்கனவே படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் படம் அதை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Articles
Next Story
Share it