vetrimaaran - gv prakash kumar
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரில் ஒருவர் வெற்றிமாறன். இவரின் படங்களில் நடிக்க இந்தியாவின் உள்ள முன்னணி நடிகர்கள் பலரும் ஆசைப்படுவார்கள். காரணம் இவரின் படங்கள் எப்பொழுதும் எதார்த்த கதைகளத்துடன் இருக்கும். அந்த வகையில் தற்போது சிம்புவுடன் அடுத்த கூட்டணி போட்டுள்ளார் வெற்றிமாறன்.
தற்காலிகமாக இந்த படத்திற்கு str-49 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இம்முறை வெற்றிமாறன் அனிருத்துடன் கூட்டணி வைத்துள்ளார். வெற்றிமாறனின் பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ் இந்த படத்தில் இடம்பெறவில்லை.
வெற்றிமாறனின் படங்களை தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற பெருமை ஜீ வி பிரகாஷை சேரும். அந்த வகையில் தற்போது இந்த கூட்டணி முறிந்திருப்பது ரசிகர்களிடம் கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் இதைப் பற்றி மூத்த பத்திரிக்கையாளரும் சினிமா விமர்சகருமான வலைப்பேச்சு அந்தணன் கூறுகையில் ”அனிருத் முதல் முறையாக சிம்புவுடன் இணைவது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது என்றே சொல்லலாம். சிம்பு நீண்ட காலமாகவே அனிருத்தை தன் படத்தில் இசையமைக்க வைக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்”.
”அதற்கு அனிருத் பெரிதாக இடம் கொடுக்கவில்லை. Beep song கூட ஒரு காரணமாக இருக்கலாம். இதனால் தனக்கு ஒரு கெட்ட பெயர், அவமானம் வந்துவிட்டது என்று நினைத்து இன்று வரை சிம்புவுடன் இணையாமல் இருக்கலாம். ஒரு வழியாக தற்போது வெற்றிமாறன் மூலம் சிம்பு-அனிருத் கூட்டணி இணைந்துள்ளது”.
”இது ஒரு பக்கம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் மறுபுறம் வெற்றிமாறன், ஜீவி உடன் கூட்டணியை முடித்துக் கொண்டது ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றத்தை கொடுத்தது. அதற்கு காரணம் வெற்றிமாறன் ஜீவியிடம் நன்றாக வேலை வாங்கிவிட்டு அவருக்கு சேர வேண்டிய சம்பளத் தொகையை கொடுக்காமல் விட்டதுதான் காரணம் என்று தகவல்கள் வருகிறது”.
”இந்த மாதிரி பல இடங்களில் ஜீவி ஏமாறும் பொழுது இந்த முறை நம்மளை விட்டு போனால் கூட நல்லது தான் என்று நினைத்திருப்பார். இவர்கள் இருவரும் பிரிவதற்கு காரணம் பணம் தான். வெற்றிமாறனுக்காக ஒரு சில படங்கள் சம்பளம் குறைவாக வாங்கி விட்டுக் கொடுக்கலாம். ஆனால் தொடர்ச்சியாக இதை செய்து கொண்டிருந்தால், மார்க்கெட்டில் இவ்வளவு வாங்குகிறோம் இவருக்காக இவ்வளவு குறைவாக வாங்க வேண்டுமா? என்று ஜீவிக்கு தோன்றியிருக்கும்”.
”ஆனால் எஸ் டி ஆர் 49 படத்திற்கு அனிருத் உள்ளே வந்தது சிம்புவின் வற்புறுத்தலாக கூட இருக்கலாம். மாநாடு படத்திற்கு அப்புறம் பெரிதாக எந்த வெற்றி படமும் சிம்பு கொடுக்கவில்லை. இந்த படமாவது சிம்புவுக்கு பெரிய வெற்றி கொடுக்கும் என்று அவர் நம்பிக் கொண்டிருக்கிறார்”.
”வெற்றிமாறனும் விடுதலை part-1 படம் நன்றாக இருந்தாலும் விடுதலை part-2வில் சிறிது சொதப்பிவிட்டார். அதனால் இருவருக்கும் இந்த படம் வெற்றி படமாக அமைய வேண்டும். படம் எப்படி வரப்போகிறது என்பதை ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன்”. என்று கூறியுள்ளார்.
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
நடிகர் தனுஷ்…
TVK VIJAY…
Dhanush: இட்லி…