vijay sethupathi - siruthai siva
நடிகர் கார்த்தியை வைத்து சிறுத்தை என்ற படத்தை இயக்கியதின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் சிவா. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இவர் சிறுத்தை சிவா என்று அழைக்கப்பட்டார். அதன் பிறகு தெலுங்கு படங்களில் பிஸியாக இருந்தாலும் தமிழில் அஜித்துடன் வீரம் படத்தின் மூலம் இன்னும் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.
இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்ததை அடுத்து அஜித் மீண்டும் சிவா உடன் கூட்டணி வைத்து ’வேதாளம்’ படத்தில் இருவரும் மாஸ் வெற்றியை பதிவு செய்தார்கள். அதன் பிறகு மீண்டும் இவர்கள் கூட்டணி தொடர்ந்தது. அடுத்து வெளியான ’விவேகம்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியை கொடுத்தது.
கொஞ்சமும் மனம் தளராத அஜித் என்னுடைய அடுத்த படத்தையும் சிவா தான் இயங்கப் போகிறார் என்று அறிவிப்பு கொடுத்தார். தொடர்ந்து சிவா அஜித் படத்தை இயக்கி வந்ததால் ரசிகர்களும் சிறிது கடுப்பில் இருந்தனர். அஜித்துக்கு வேற டைரக்டரே கிடைக்கலையா? இதோட அஜித் கதையை சிவா முடிக்க போறார் என்று பல விமர்சனங்கள் எழுந்து வந்தது.
இம்முறை ’விஸ்வாசம்’ திரைப்படத்திற்காக இணைந்த இந்த கூட்டணி negative review சொன்னவர்களுக்கு பக்காவாக பதிலடி கொடுக்கும் வகையில் இந்த படம் இருந்தது. அந்த காலகட்டத்தில் இந்தப் படம் தமிழ் சினிமாவில் புதிய வசூல் சாதனை படைத்தது. அதன் பிறகு சிவா ரஜினியுடன் இணைந்தார். இவர்கள் கூட்டணியில் உருவான ’அண்ணாத்த’ திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்தது.
கங்குவா படத்தைப் பொறுத்தவரை இரைச்சல் அதிகமானது தான் காரணம். அதற்கு ஒரு சரியான sound mixing செய்பவரை நியமித்திருந்தால் அந்த படம் இந்த பிரச்சனையை சந்தித்திருக்காது. வேறு ஏதும் குறைகளை அந்த படத்தில் சொல்லி இருக்க மாட்டார்கள். அதனால் யாரோ சில பேர் செய்த தவறினால் சிறுத்தை சிவா மாட்டிக் கொண்டு முழிக்கிறார் என்றுதான் நினைக்கிறேன்.
தற்போது விஜய் சேதுபதி உடன் இணை உள்ளார் என்ற தகவல் வருகிறது. கண்டிப்பாக இதில் எந்த பிரச்சனையும் வராது நினைத்த படத்தை எடுக்க முடியும். அதனால் சிறுத்தை சிவாவிற்கு கூடிய சீக்கிரமே விடிவுகாலம் பிறக்கும் என்று நம்பலாம். என்று கூறியுள்ளார்.
Idli kadai:…
நம்பிக்கை நட்சத்திரம்…
Dhanush: தனுஷ்…
Dhanush: நடிகர்…
Swetha Mohan:…