vadivelu - rajini
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினி. 75 வயதை கடந்தும் இன்றும் ரஜினி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான அவரது ’கூலி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த வருடம் ஆரம்பித்து 8 மாதங்கள் நிறைவடைந்ததையடுத்து தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தும் அளவிற்கு எந்த படமும் வெளியாகவில்லை. ஓரளவுக்கு பேர் சொல்லும் படமாக அஜித்தின் ’குட் பேட் அக்லி’ திரைப்படம் இருந்தது. அதன் பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ’தக் லைஃப்’ திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றியது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் அந்த வெற்றிடத்தை நிரப்பி இந்த வருடத்தின் மிகப்பெரிய blockbuster கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூலி படம் சறுக்கலை கொடுத்தது.
தற்போது ரஜினி ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு ஆறு மாத இடைவெளியில் தனது autobiography யை எழுத உள்ளார். எதற்கு இந்த Gap . திடீரென்று சுயசரிதை எழுத என்ன காரணம் என்பதை மூத்த பத்திரிக்கையாரும் சினிமா விமர்சகருமான வலைப்பேச்சு அந்தணன் கூறி இருக்கிறார்.
அதில், “தேர்தல் நெருங்க நெருங்க ரஜினியையும் தேர்தல் பிரச்சாரங்களில் இறக்கி விட வாய்ப்பு இருக்கிறது. ஒரு பக்கம் பிஜேபி, அண்ணா திமுக கூட்டணி இருக்கிறது. மறுபுறம் திமுக இருக்கிறது. ரஜினி ஆதரவு கொடுத்தால் இந்த இரண்டு கட்சிகளுக்கும் கொடுக்க வேண்டும். பிஜேபிக்கு தனது ஆதரவை கொடுத்துவிட்டு திமுகவிற்கு எதிராக நிற்க முடியாது”.
”இதற்காகத்தான் ரஜினி யாருடைய வலையிலும் நாம் சிக்க கூடாது என்று, ‘நான் ஒரு ஆறு மாதம் சுயசரிதை எழுத போகிறேன்’ என்று சொல்லி இருக்கிறார். ஓட்டு போடும் நேரத்தில் வந்து ஓட்டு போட்டுவிட்டு போயிடலாம் என்று திட்டம் போட்டு இருப்பார். திமுகவும் நாளை விஜயை சமாளிப்பதற்கு ரஜினியை களம் இறக்கலாம் என்று எண்ணி அவர் மீது pressure போடலாம். அந்த நேரத்தில் ரஜினி என்ன முடிவெடுக்க போகிறார் என்பது யாருக்கும் தெரியாது”. என்று கூறியுள்ளார்.
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…