Categories: Cinema News latest news

விஜயகாந்தையே ஏமாத்திட்டாங்க விஜய் எம்மாத்திரம்… சூறாவளியில் சிக்கி சுழற்றி வீசப்படுவாரா?

விஜய் அரசியல் பயணம் :

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முனைப்போடு செயல்பட்டு வருகிறார். விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் சமயத்தில் திடீரென்று கட்சி ஆரம்பித்து அரசியலில் பயணிக்க ஆரம்பித்து விட்டார்.

ஒதுக்கப்பட்ட விஜயகாந்த் :

பொதுவாக நடிகர்கள் சினிமாவில் மார்க்கெட் போனதுக்கு பிறகு தான் அரசியல் பக்கம் வருவார்கள். ஆனால் விஜய் சினிமாவில் no-1-ஆக இருக்கும் பொழுதே விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார். இதற்கு முன் விஜயகாந்த் அரசியலுக்கு வரும்பொழுது அவருக்கு பல இடையூறுகள் ஏற்பட்டது. மக்களுக்கு உதவ வந்தவரை கடைசியில் மக்களால் ஒதுக்கப்பட்டார்.

valaipechu anthanan

உஷாரான விஜய் :

  • ஆனால் இன்று அவர் மறைந்த பிறகு அவரை தூக்கி வைத்து கொண்டாடுவது எதற்கும் பயனில்லாமல் போனது. இதே கதை தான் விஜய்க்கும் நடக்கலாம். அவர் சுதாரிப்பாக செயல்பட வேண்டும் என்று மூத்த பத்திரிக்கையாளரும் சினிமா விமர்சகருமான வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார்.
  • விஜய் தற்போது கூட்டணியை பார்த்து பயந்து கொண்டிருக்கிறார். காரணம் இதற்கு முன் மக்கள் நல கூட்டணி என்று ஒன்று ஆரம்பித்தார்கள். அதன் முக்கிய காரணமே விஜயகாந்தை காலி செய்வதுதான்”.
  • ”ஆக சதி திட்டத்தோடு கூட்டணிக்கு வருபவர்கள் என்ன வேலை எல்லாம் செய்வார்கள் என்று இதற்கு முன் விஜயகாந்த் விஜய்க்கு ஒரு உதாரணமாக இருக்கிறார். அதனால்தான் தற்போது வரை யாரையுமே கிட்ட சேர்க்க யோசித்துக் கொண்டிருக்கிறார்”.

சதி திட்டம் செல்லாது :

”தேர்தல் அறிவித்த பின்னர் வேண்டுமென்றால் கூட்டணி சேர்க்கலாம். அரசியல் பொறுத்த வரை உள்ள வரும்போது தெளிவாக வந்தால் தப்பித்து விடலாம். விஜயகாந்த் மாதிரி ஒருத்தர் அரசியல்ல அவ்வளவு பெரிய ஞானம் இருந்தவரை ஏமாத்தி விட்டாங்க”.

”விஜய் இதையெல்லாம் கவனித்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட அண்ணாமலை விஜய்யை சந்திக்க appointment கேட்டிருக்கிறார். அதற்கு விஜய் கொடுக்கவில்லை. என்ன நோக்கத்திற்காக அண்ணாமலை வருகிறார் என்பது விஜய்க்கு தெரிந்திருக்கிறது. அதனால் சந்திப்பே வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளார். விஜயகாந்த் ஏமாந்த மாதிரி விஜய் ஏமாற வாய்ப்பு கொடுக்க மாட்டார்”. என்று கூறியுள்ளார்.

SATHISH G
சதீஷ் பி.இ. பட்டதாரியான இவர் 3 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 2 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
SATHISH G