ராதா ரவிக்கும் சின்மயி பாடாமல் போனதற்கும் என்ன தொடர்பு இருக்கு?.. பிரபலம் இப்படி கேட்டுட்டாரே?..

பாடகி சின்மையிக்கு பாடும் வாய்ப்புகள் இல்லாமல் போனதற்கு நடிகர் ராதா ரவி தான் காரணம் என தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் தற்போது அது குறித்து விளக்கம் அளித்துள்ளார் பத்திரிக்கையாளர் அந்தணன்.
பாடகி சின்மயி பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதற்கு வைரமுத்து குற்றச்சாட்டுகளை மறுத்து காலம் உண்மையை வெளிப்படுத்தும் என பதிலளித்திருந்தார். இதற்கு பிறகு சின்மயிக்கு தமிழ் திரையுலகில் பாடல்கள் பாடும் மற்றும் டப்பிங் பேசும் வாய்ப்புகள் குறைந்ததாகவும், அவர் ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சின்மயி, வைரமுத்து திமுகவுக்கு நெருக்கமானவர் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிலர் அவருக்கு ஆதரவாக பேசினாலும், சிலர் அவர் ஏன் வழக்கு தொடரவில்லை, ஆதாரம் எங்கே என எதிராகவும் விமர்சித்தனர். அதை தொடர்ந்து மீண்டும் சமீபத்தில் வைரமுத்து மீது 16-17 பெண்கள் அவரை குற்றம்சாட்டியதை நினைவூட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
மேலும், சின்மையி பாடாமல் இருப்பதற்கு ராதா ரவி தான் காரணம் என குற்றசாட்டும் இருக்கும் நிலையில் அது குறித்து பேசிய அந்தணன், சின்மையி பல படங்களுக்கு டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றியிருக்கிறார், சங்கத்திற்கு சந்தா கட்டாததால் ரெட் கார்ட் அளிக்கப்பட்டு நீக்கப்பட்டார். மேலும், டப்பிங் ஆர்டிஸ்டின் சங்கத்தலைவராக இருக்கும் ராதா ரவி பாடகியாக இருக்கும் சின்மையியின் வாய்ப்பை எப்படி தட்டி பறிக்க முடியும், திரையுலகில் இருப்பவர்களுக்கு கூட இது தெரியவில்லை.
சின்மையி மீடூவில் கிடைத்த பாப்பூலாரிட்டிக்கு அடிக்ட் ஆயிட்டார், அதை தொடர்ந்து அவர் பலவற்றிற்கும் குரல் கொடுத்து வரும் நிலையில் பலரும் அவருடன் பணியாற்ற பயப்படுகிறார்கள். மேலும், சினிமாவில் இருக்கும் ஆண்கள் பணம் சம்பாதிப்பதற்கும், புகழ் பெருவதற்கும் வருவதில்லை, பெண்களுக்காக தான் வருகிறார்கள் என்றும் பகீர் கிளப்பும் விதமாக பேசியுள்ளார்.
ஒரு பக்கம் முத்தமழை பாடலுக்குப் பிறகு திடீர் சின்மயி ஆதரவாளர்கள் முளைத்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் அவரை எதிர்த்தும் சிலர் பேசி வருகின்றனர்.