விஜயகாந்தே புகழ்ந்த மனுஷன்.. விஷாலின் இந்த நிலைமைக்கு அந்த 2 பேர் தான் காரணமா?..

by Ramya |
anthanan
X

anthanan 

நடிகர் விஷால்: இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார், சந்தானம், அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் மதகஜராஜா. இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. 2013 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்த இந்த திரைப்படம் தயாரிப்பாளரின் கடன் பிரச்சினை காரணமாக கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டும் பலன் இல்லை.

தற்போது பொங்கல் ரேஸில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இந்நிலையில் நேற்று மதகஜராஜா படத்தின் விளம்பர நிகழ்ச்சி நடைபெற்றது. இதை பார்த்த பலருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது அதற்கு காரணம் நடிகர் விஷால் தான். எப்போதும் தன்னை ஒரு பிட்னஸ் நபராக வைத்துக் கொள்பவர் நடிகர் விஷால். தனது உடல் தோற்றத்தில் கம்பீரமாக இருக்கக்கூடிய மனுஷன் அந்த நிகழ்ச்சியில் பேசக்கூட முடியாமல் தவித்தார்.


இதை பார்த்த பலரும் ஷாக் ஆகினார்கள். நடிகர் விஷால் வெயிட் போட்டு மைக்கை பிடித்து சரியாக பேச முடியாமல் தவித்தார். விஷாலின் கை பயங்கரமாக நடுங்கியது. அவரின் குரலும் நடுங்கியது. சரியாக அவர் பேசியது புரியவில்லை. என்ன இப்படி ஆகிவிட்டார் என்று பலரும் கூறிருந்தார்கள். ஆனால் அவருக்கு நல்ல மலேரியா காய்ச்சல். இருப்பினும் படத்தின் விளம்பரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அதே காய்ச்சலுடன் கலந்து கொண்டிருக்கிறார் என்று பலரும் விளக்கம் அளித்தார்கள்.

இருப்பினும் இவரின் இந்த நிலைமைக்கு காரணம் இரண்டு நபர்கள் என்று பிரபல சினிமா விமர்சகர் அந்தணன் கூறியிருக்கின்றார். தனது youtube சேனலில் நடிகர் விஷாலின் இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்பது குறித்து பேசி இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ' நடிகர் விஷாலின் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் இரண்டு நபர்கள். முதலாவது இயக்குனர் பாலா. அவர் இயக்கத்தில் திரைப்படங்களில் நடிப்பதற்கு பல நடிகர்கள் போட்டி போடுவார்கள்.

அப்படி தான் விஷாலுக்கும் அவன் இவன் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தில் நடிகர் விஷால் மாறுகண் வேடத்தில் நடித்திருப்பார். அப்படி அவர் இருப்பதற்கு பலவருடம் பிராக்டிஸ் செய்தாராம். சமீபத்திய பேட்டியில் கூட பாலா ஒரு விஷயத்தை கூறியிருப்பார். அந்த திரைப்படத்தின் டப்பிங் சமயத்தில் டப்பிங் பேப்பரை கையில் எடுத்தாலும் நடிகர் விஷாலின் மாறுகண்ணாக மாறிவிடுமாம்.

அந்த அளவுக்கு இந்த திரைப்படத்திற்காக உழைத்திருந்தார் விஷால். இதுவே அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கின்றது. மாறுகண் வைத்து இந்த திரைப்படத்தில் நடித்த காரணத்தால் ஒற்றைத் தலைவலியால் பல நாள் அவதிப்பட்டு இருக்கின்றார் நடிகர் விஷால். இதனை சரி செய்வதற்கு சில பழக்கங்களுக்கு அடிமையாகி விட்டார். அதனால் இவரின் நிலைமை இப்படி ஆகிவிட்டது.

மற்றொரு காரணம் அவரின் நண்பர்கள் நந்தா, ரமணா. நடிகர் விஷால் நடிகர் சங்கத்தில் எப்படியாவது பதவியைப் பிடிக்க வேண்டும் என்று இறங்கியதற்கு காரணம் நடிகர் சரத்குமார். அந்த சமயத்தில் அவரின் தந்தை சரத்குமாரை வைத்து சில படங்களை தயாரித்திருந்தார். அப்போது சில மனக்கசப்புகள் ஏற்பட்டு இருந்தது.

சரத்குமாரை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்திற்காக நடிகர் சங்கத்தின் தலைவராக வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார் விஷால். அந்த சமயத்தில் மொத்த இளைஞர்கள் கூட்டமும் விஷால் பின்னால் இருந்தது. அப்படி வந்து இணைந்தவர்கள் தான் ரமணா, நந்தா என்று இருவர். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் விஷாலை சுற்றி ஒரு வேலியை அமைக்க தொடங்கி விட்டார்கள்.


யாரையுமே அவர்கள் விஷாலை நெருங்க விடுவதில்லை. இதனால் நடிகர் விஷால் பல நல்ல முடிவுகளை எடுக்க முடியாமல் போனார். இவர்கள் விஷாலை வைத்து ஒரு படம் எடுத்து வந்தார்கள். அந்த படத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விஷாலுக்கு மனவலியை கொடுத்தது. இப்படி பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவித்த விஷால், அவரை காலி செய்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.

நேற்று நடந்த நிகழ்ச்சியில் விஷாலின் நிலைமையை பார்த்து பல நபர்கள் பரிதாபப்பட்டார்கள். எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிவிட்டார் என்று கூறிவந்தனர். பல திரைப்படங்களில் ஸ்டண்ட் கதாபாத்திரங்களில் அசால்டாக நடிக்க கூடியவர் விஷால். ஒரு கட்டத்தில் விஜயகாந்தை இவரின் திரைப்படத்தை பார்த்துவிட்டு மிகப்பெரிய ஆக்சன் நடிகராக வரக்கூடிய தகுதி அவனுக்கு இருக்கின்றது என தனது வாயால் புகழ்ந்திருக்கின்றார்' என்று அந்த பேட்டியில் பேசியிருந்தார் அந்தணன்.

Next Story