vadivelu
சமீபத்தில் வடிவேலு ஒரு 10 youtube-பர்கள் சேர்ந்து சினிமாவை அழித்துக் கொண்டு வருகிறார்கள். அவர்களை தூங்க விடக்கூடாது என்று ஆக்ரோஷமாக கூறியிருந்தார். இதற்கு பல விமர்சகர்களும் வடிவேலுவை பந்தாடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது மூத்த பத்திரிக்கையாளர் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் வடிவேலுவை புரட்டி புரட்டி எடுத்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது,” வடிவேலு ஒரு முட்டாள். அவர் ராஜ்கிரன் அலுவலகத்தில் எப்படி இருந்தார் என்பது எனக்கு தெரியும். இப்போ பெரிய ஆளா இருக்கிறோம் என்று வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது. அடிப்படையில் அவர் திறமையானவர்தான். ஆனால் அந்த திறமைக்கு ஏணிப்படி போட்டது பத்திரிக்கையாளர்கள் நாங்கள் தான். எத்தனையோ படங்களின் இசை வெளியீட்டு விழாவில் எங்களை உயர்த்தி பேசியிகிறார்.
”இதே போல தான் 23ம் புலிகேசி திரைப்படம் நன்றாக இருக்கிறது என்று சொன்னோம். அப்பொழுது வடிவேலு எங்கிருந்தார், வாயை அடகு வைத்திருந்தாரா? இவ்வளவு நாள் வெளியே வராமல் குறை சொல்லாத வடிவிலு இன்று அவர் படம் மாரீசன் ஓடவில்லை என்றதும் நடிகர் சங்க பொதுக்கூட்டத்தில் எங்களை அவதூறாக பேசலாமா ? ”
”24ம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஷங்கருடன் இவர் செய்த சேட்டைகளை வெளியே சொல்ல முடியாது. ஷங்கர் இன்னும் வடிவேலுவுடன் மல்லு கட்டிக் கொண்டிருக்கிறார். சமாதானம் பேச தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது வடிவேலு போனாரா? வடிவேலு தேவையில்லாமல் பல பேரை குறை சொல்லி கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரிடமே நூற்றுக்கணக்கான குறைகள் உள்ளது என்பதை அவர் புரிந்து உணர வேண்டும்”. என்று கூறியுள்ளார்.
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…
தமிழக வெற்றிக்…