bayilvan ranganathan - kpy bala
kpyபாலா இன்டர்நேஷனல் கைக்கூலி அவர் தமிழ்நாட்டுக்கு பேராபத்து என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி பாலா மீது பல அடுக்கடுக்கான புகார்களை எழுப்பி வந்தார். அதற்கு பாலாவும்,’நான் சர்வதேச கைக்கூலி அல்ல நான் தினக்கூலி. நான் செய்யும் உதவிகள் அனைத்தும் என்னுடைய சம்பாத்தியத்தின் மூலம் வந்ததுதான். நான் யாரிடமும் கேட்கவும் மாட்டேன் கேட்கவும் இல்லை நான் கடினமாக உழைத்து அதில் வரக்கூடிய பணத்தில் தான் மற்றவருக்கு உதவி செய்து வருகிறேன்’. என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக kpy பாலா மீது சினிமா பிரபலம் ஆதவனும் பத்திரிகையாளர் உமாபதியும் மாறி அடுக்கடுக்கான புகார்களை பரப்பி வருகின்றனர். பாலாவும் இதுவரை பத்திரிக்கையாளர்களை சந்தித்து இது குறித்து பேச மறுத்து வருகிறார். இந்நிலையில் மூத்த பத்திரிகையாரும் சினிமா நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பாலாவிற்கு தற்போது ஆதரவு குரல் கொடுத்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது,” எந்த ஒரு பத்திரிகைகாரணும் ஆதாரத்தை நாம் வெளியிடுவேன்… என்று கூவிக்கொண்டே இருக்க மாட்டான். Blackmail பண்றவங்கதான் இப்படி பேசுவாங்க. உமாபதியும் கடந்த மூன்று வாரங்களாக ஒவ்வொரு YouTube channel-க்கு சென்று புகார் தெரிவிக்கிறாரே தவிர அதற்கான ஆதாரத்தை இன்னும் அவர் வெளியிடவில்லை”.
kpy பாலா மிகவும் கஷ்டப்பட்டு மேலே வருகிறார். கடன் வாங்கி கூட உதவி செய்ய விரும்பாதவர். அவரை குறை சொல்வதில் நியாயம் இல்லை. அது மட்டும் இல்லை அவருக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருது என்று குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். அதற்கான ஆதாரம் இருக்கா?.
அப்படி பணம் வந்தால் அமலாக்கத்துறை பாலாவை சும்மா விடுவார்களா? பிரதமர் மோடி வெளிநாட்டில் இருந்து வரும் பணம் அனைத்தையும் நிறுத்தி வைத்துவிட்டார். இதை மட்டும் சும்மா விடுவாரா? அதுமட்டுமில்லை பாலாவை பின்னாடி இருந்து யாரோ இயக்குகிறார்கள் என்று சொல்கிறார்கள். அவர் என்ன முட்டாளா? அல்லது மெஷினா இயக்குவதற்கு, பாலா நல்ல புத்திசாலி அருமையான stand up comedian அவருக்கு யாரும் புத்திமதி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
TVK Vijay:…
TVK Vijay:…
TVK Vijay:…
தமிழக வெற்றிக்…
TVK Vijay:…