புஷ்பா புருஷன் மாதிரிதான் நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன்!.. விளாசி தள்ளிய பிஸ்மி!..

by Ramya |
bismi
X

bismi

நடிகை நயன்தாரா:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஐயா என்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரைப்படத்தை தொடங்கிய நயன்தாரா தற்போது தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக இருந்து வருகின்றார். சினிமாவில் 20 வருடங்கள் தாண்டி கதாநாயகியாக ஜொலித்து வருகின்றார் நடிகை நயன்தாரா.

விக்னேஷ் சிவனுடன் காதல்:

நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் என்கின்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார். பின்னர் கடந்த 2022 ஆம் ஆண்டு மிகப் பிரமாண்டமாக இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டார் நடிகை நயன்தாரா. குழந்தைகள் பெற்றுக் கொண்ட பிறகும் சினிமாவில் பிஸியாக நடித்து வருகின்றார். குழந்தைகளை வளர்ப்பது, சினிமா மற்றும் சொந்த பிசினஸ் என்று படு பிஸியாக இருந்து வருகின்றார்.

விக்னேஷ் சிவன் அட்ராசிட்டி:

விக்னேஷ் சிவன் நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு சென்றிருந்தார். அங்கு முதல்வர் ரங்கசாமியை சந்திக்க முயற்சி செய்த நிலையில் அவருடைய சந்திப்பு நடைபெறவில்லை. இதனால் மற்றொரு அமைச்சருடன் அங்கு இருக்கும் பிரபல கடற்கரை ஹோட்டலை தனக்கு விலைக்கு கொடுக்கும்படி கேட்டு இருக்கிறார்.


இதை கேட்டு ஷாக்காகி இருக்கின்றார் அமைச்சர். அரசு ஹோட்டல்கள் விலைக்கு கொடுக்க மாட்டார்கள் என்று கூறியும், ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாடகைக்கு விடுவீர்களா என்றும் கேட்டிருக்கின்றார் விக்னேஷ் சிவன். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி பலரும் விக்னேஷ் சிவனை கிண்டல் செய்து வந்தார்கள்

வலைப்பேச்சு பிஸ்மி பேட்டி:

இந்நிலையில் விக்னேஷ் சிவன் செயல் குறித்தும் நடிகை நயன்தாரா பேட்டி குறித்தும் வலைப்பேச்சு பிஸ்மி தனியார் youtube சேனலுக்கு பேட்டி அளித்து இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: ' நடிகை நயன்தாரா நேரடியாக வலைப்பேச்சு சேனலை தாக்கி தான் பேசியிருந்தார். நாம் முன்னணி நடிகை, நாம் சொல்கின்ற பொய்யெல்லாம் இந்த உலகம் நம்பிவிடும் என்கின்ற முட்டாள்தனமான நம்பிக்கையில் இருந்து வருகின்றார்.

நயன்தாராவுக்கு தெரியும் அவருடைய வாழ்க்கையில் மறைக்கப்பட்ட பல உண்மைகள் எங்களுக்கு தெரியும் என்று அதை வெளியில் சொல்லி விடுவார்களோ? என்கின்ற பயத்தில் இப்படி பேட்டி அளித்து இருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் விக்னேஷ் சிவன் பாண்டிச்சேரிக்கு சென்று அரசு ஹோட்டலை விலைக்கு கேட்டதெல்லாம் எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.

அரசு சம்பந்தமான எந்த ஒரு நிறுவனத்தையும் விலைக்கு கொடுக்க மாட்டார்கள் என்பது கூட அவருக்கு தெரியாதா? சினிமாவில் இருக்கும் பலரும் ஏதாவது ஒரு பிசினஸ் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவது வழக்கம் தான். அப்படி தான் நயன்தாரா பல பிசினஸ் செய்து வருகின்றார். நயன்தாராவின் புருஷனாக இருக்கக் கூடிய விக்னேஷ் சிவனும் நயன்தாராவின் பணத்தை வைத்துக்கொண்டு அதை எதிலாவது முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக இது போன்ற வேலைகளை பார்த்து வருகின்றார்.


விக்னேஷ் சிவனின் அடையாளமே நயன்தாராவின் புருஷன் என்பது தான். ஒரு படத்தில் கூட புஷ்பா புருஷன் என்று மிக பிரபலமாக பேசுவார்கள். அது போல் தான் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் புருஷன் என்கின்ற அடையாளத்தை விசிட்டிங் கார்டாகவே பயன்படுத்தி வருகின்றார்' என்று அந்த பேட்டியில் பேசியிருக்கின்றார்.

Next Story