நடிக்க வரும்போது ஆம்னி பஸ்!.. இப்ப தனி விமானம்!.. எல்லாம் மறந்துபோச்சா நயன்தாரா!..

by Ramya |
nayan
X

nayan 

நடிகை நயன்தாரா:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை நயன்தாரா. சினிமாவில் 20 வருடங்களை தாண்டியும் கதாநாயகியாக ஜொலித்து வருகின்றார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.

தற்போது சினிமாவில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வரும் நயன்தாரா குழந்தைகள், பிசினஸ் என அனைத்தையும் மிகச் சிறப்பாக கவனித்து வருகின்றார். கடந்த மாதம் நடிகர் தனுஷ் குறித்து அறிக்கை வெளியிட்டு சமூக வலைதள பக்கங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தார். நயன்தாராவின் டாக்குமெண்டரியில் நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து வெறும் 3 நிமிட காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் நடிகர் தனுஷ் நஷ்ட ஈடு கேட்டதாக கூறி மூன்று பக்கத்திற்கு அவரைக் காட்டமாக விமர்சித்து அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

இந்த அறிக்கை சோசியல் மீடியாக்களில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து பலரும் நயன்தாராவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பேசி வந்தார்கள். இந்நிலையில் நடிகை நயன்தாரா நேற்று முன்தினம் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தார். இந்த பேட்டியில் தனது வாழ்க்கையில் அவர் சந்தித்த போராட்டங்கள், கடந்து வந்த பாதைகள் என அனைத்தையும் கூறியிருந்தார்.


மேலும் தன் மீது பாயும் விமர்சனம் பற்றியும் கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அதிலும் வலைப்பேச்சு சேனலை நடத்தி வரும் பிஸ்மி, அந்தணன், சக்தி என்கின்ற மூன்று பேரையும் குரங்குகள் என்று விமர்சித்து பேசி இருந்தார். நடிகை நயன்தாராவின் இந்த பதிவுக்கு வலைப்பேச்சு சேனலில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டது.

நயன்தாரா வெளியிட்ட குற்றசாட்டுகள் அனைத்திற்குமே பதில் கூறியிருந்தார்கள். மேலும் நயன்தாரா எப்படி சினிமாவுக்குள் வந்தார். அவரின் வரலாறு என்ன என்பது எங்களுக்கு தெரியும். அதை நாங்கள் வெளியில் சொல்லி விடுவோமோ என்கின்ற பதட்டத்தில் இப்படி கூறி வருகின்றார். நயன்தாரா வாழ்க்கையில் மறைக்கப்பட்ட பல உண்மைகள் எங்களுக்கு தெரியும். அது மட்டும் இல்லாமல் தற்போது அவர் ஒரு மார்க்கெட் இழந்த நடிகை என்பதை மனதில் வைத்துக் கொண்டு பேசினால் சரியாக இருக்கும் என்று பிஸ்மி தனியார் youtube சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார்.


இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் பிஸ்மி ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் ஐயா திரைப்படத்தின் ஆடிஷனுக்கு கேரளாவில் இருந்து சென்னை கோயம்பேடுக்கு ஆம்னி பஸ்ஸில் வந்து இறங்கிய நயன்தாராவுக்கு இன்றைக்கு தனி விமானத்தில் பயணிக்கும் அளவுக்கு சுகபோக வாழ்க்கை இருக்கின்றது என்று விமர்சித்து பதிவிட்டு இருக்கின்றார். இந்த பதிவானது தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

Next Story