எம்ஜிஆர் கூட இப்படி பண்ணினதில்லை! சேரன் ஆடிய ஆட்டம் இருக்கே
தமிழ் சினிமாவில் நமது வாழ்வியலை அழகாக எடுத்துரைக்கும் இயக்குனர்களில் ஆகச்சிறந்த இயக்குனராக இருப்பவர் இயக்குனரும் நடிகருமான சேரன். இவர் எடுத்த படங்களை பார்க்கும் பொழுது எந்த அளவுக்கு குடும்பங்கள் மீதும் நமது கலாச்சாரத்தின் மீதும் இவருடைய மரியாதை இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வரும்.
அந்த அளவுக்கு குடும்பங்களில் இருக்கும் உறவுகளுக்கு இடையேயான பாசத்தை மிக அற்புதமாக காட்டி இருப்பார் சேரன். அதோடு நமது கலாச்சாரம் எந்த அளவு பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதையும் படங்களில் காட்டிருப்பார். பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து, பாரதி கண்ணம்மா போன்ற பல படங்களை உதாரணமாக கூறலாம்.
இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளரான பிஸ்மி சேரனை பற்றிய ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார். அதாவது வலைப்பேச்சு டீமுக்கும் சித்ரா லட்சுமணனுக்கும் இடையில் நடந்த ஒரு உரையாடலில் சித்ரா லட்சுமணன் பிஸ்மியிடம் ‘நீங்கள் பல கட்டுரைகள் எழுதி இருக்கிறீர்கள். அந்த கட்டுரையின் மூலம் ஏதாவது உங்களுக்கு வருத்தப்படும் விதமான சம்பவங்கள் நடந்திருக்கிறதா’ என்ற ஒரு கேள்வியை கேட்டு இருந்தார்.
அதற்கு பதில் அளித்த பிஸ்மி சேரனால் நான் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டேன் என கூறி நடந்த சம்பவத்தை எடுத்துரைத்தார். முன்பு பாரசீக ரோஜா என்ற பெயரில் ஒரு படத்தை எடுக்க நினைத்தாராம் சேரன். அப்போது பிஸ்மி பல பத்திரிகைகளில் வண்ணத்திரை எழுதி வந்தாராம்.
அப்போது ஒரு பத்திரிக்கையில் வண்ணத்திரையில் பாரசீக ரோஜா படத்தின் கதையைப் பற்றி எழுதியிருக்கிறார். அதை பார்த்ததும் விநியோகஸ்தர்கள் இப்படிப்பட்ட கதையையா சேரன் எடுக்கப் போகிறார் என புலம்பி வந்தார்களாம். அதுமட்டுமல்ல இப்படி ஒரு படம் வந்தால் படத்தை வாங்கவே கூடாது என்றும் விநியோகஸ்தர்கள் நினைத்திருந்தார்களாம்.
இது சேரனின் காதுக்கு தெரிய வர பிஸ்மியை நேரடியாக எதுவும் சொல்லாமல் அவருடைய வீட்டிற்கு நாள்தோறும் சேரன் தன்னுடைய உதவியாளர் ஒருவரை போகச் சொல்லி பிஸ்மி கையில் ஒரு பூங்கொத்தை கொடுத்து நன்றி என சொல்லச் சொன்னாராம். இது தினமும் நடந்து கொண்டிருக்க பிஸ்மிக்கு கடுப்பாகிவிட்டதாம்.
உடனே ஆறாவது நாளில் வந்த ஒரு உதவியாளரை நிறுத்தி பிஸ்மி நீங்க என்ன பொக்கே வியாபாரமா செய்கிறீர்கள் என கேட்டாராம். அதுமட்டுமல்ல சேரனுக்கு தைரியம் இருந்தால் நேராக என்னிடம் வந்து பேசச் சொல்லு. இந்த மாதிரி ஆட்களை அனுப்ப வேண்டாம் என எச்சரித்து அனுப்பினாராம் பிஸ்மி.
இது அப்படியே போக இன்னொரு சம்பவமும் நடந்திருக்கிறது. பிஸ்மி ஏற்கனவே பத்திரிகை துறையில் இருப்பதால் பத்திரிக்கை துறையில் இருக்கும் ஒரு முக்கியமான நபரை சேரன் தன் கையில் வைத்துக் கொண்டு பல பத்திரிக்கை நிறுவனங்களில் உள்ள பத்திரிக்கை ஆசிரியர்களை சந்தித்து பிஸ்மிக்கு உங்கள் பத்திரிக்கையில் எழுத வாய்ப்பு கொடுக்காதீர்கள் என்றெல்லாம் கூறி வந்தாராம் சேரன்.
எம்ஜிஆர் கூட இந்த அளவு பண்ணியதில்லை. ஆனால் சேரன் மிக மோசமாக நடந்து கொண்டார் என பிஸ்மி கூறினார். இதுதான் என்னை அவரிடம் இருந்து விலகி இருக்க வைத்த சம்பவம். அவரால் ஏகப்பட்ட மனவேதனைக்கு ஆளானேன். அதன் பிறகு ஒரு கட்டத்தில் இருவரும் பரஸ்பரம் ஆனோம் என பிஸ்மி கூறினார்.