பாபா படம் பத்து பைசாவுக்கு கூட தேறாது!.. சூர்யாவுக்கு எதிராக சிவகார்த்திகேயன் சதி!.. பிரபலம் ஓபன்!..

by SARANYA |
பாபா படம் பத்து பைசாவுக்கு கூட தேறாது!.. சூர்யாவுக்கு எதிராக சிவகார்த்திகேயன் சதி!.. பிரபலம் ஓபன்!..
X

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் ரூ.235 கோடி வரை வசூலை அள்ளியிருந்தாலும் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை விட ஷேர் கம்மி தான் என வெளிபடையாக ரெட்ரோ படத்தின் தோல்வியை பற்றி பேசியுள்ளார் பத்திரிகையாளர் பிஸ்மி.

யூடியூபர் ஒருவர் சூர்யாவிற்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே சின்ன மோதல் உள்ளதாகவும், சிவகார்த்திகேயன் ஐடி விங்கை வைத்து சூர்யாவுக்கு எதிராக பேசி வருதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது சரியா என்று கேட்டதற்கு, பத்திரிகையாளர் பிஸ்மி ஆமாம் சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் ஹிட்டிற்கு பிறகே இணைய கூலிப்படையை உருவாக்கிவிட்டார். மக்களிடையே சிவகார்த்திகேயனின் படம் வரவேற்கப்படாவிட்டாலும் சமூக வலைத்தளத்தில் அவரது கூலிப்படை அவரை ப்ரின்ஸ் என்று கொண்டாடுவார்கள்.


இதே போல் எல்லா பிரபலங்களும் இணைய கூலிப்படையை வைத்துள்ளனர். விஜயின் கூலிப்படை அஜித்தை திட்டுவதும், அஜித்தின் கூலிப்படை விஜய்யை திட்டுவதும் வழக்கமாக வைத்துள்ளனர். சிவகார்த்திகேயனின் ஐடி விங் மட்டுமல்ல எல்லா பிரபலங்களுடைய ஐடி விங்கும் இதை தான் செய்கிறார்கள். இதை ரசிகர்கள் மட்டும் செய்வதில்லை.

நடிகர் சூர்யா ஜெய் பீம் படத்தின் மூலம் வன்னியர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தான் சூர்யாவின் படத்தை அவதுறாக பேசி ஓட விடாமல் செய்கிறார்களா என்று கேட்டதற்கு, அப்படி இல்லை படம் நல்லா இருந்தா யார் என்ன பேசினாலும் ஓடிவிடும், அப்படி பார்த்தால் சூர்யாவின் படங்கள் கொஞ்சம் வீக்காக தான் உள்ளன என்றார்.

இதே போல் ரஜினிகாந்துக்கும் வன்னியர்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தான் பாபா படத்தை ஓடவிட வில்லை அதை சரி செய்ய தான் ரஜினி சிவாஜி ப்ரோடக்ஸனில் நடித்தார் என்பது உண்மையா? என கேட்டதற்கு, இல்லை அது ஒரு அபாண்டமான பொய் பாபா படம் பத்து பைசாக்கு கூட தேறாது, அது ஒரு மொக்க படம், பாபா படம் ரஜினிகாந்த் அவரின் சுய திருப்திக்காக எடுத்தார். இதே பிரச்சனை பாட்ஷா மற்றும் அண்ணாமலை படத்திற்கும் வந்திருந்தால் படம் வெற்றி பெற்று தான் இருக்கும். படம் நல்லா இருந்தா யார் என்ன சொன்னாலும் வெற்றிக்கொடியை நாட்டும் என்பதை கூறினார் பிஸ்மி.

Next Story