விஜய் கால் தூசிக்கு வருவாரா சீமான் ?.. ஏமாத்தி பிழைக்கிறவருக்கு எதுக்கு இந்த பொழப்பு..
விஜயை கிழிக்கும் சீமான் :
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயை தொடர்ந்து சீமான் விமர்சித்து வருகிறார். ஒரு காலத்தில் விஜயை புகழ்ந்த சீமான் இன்று அதே வாயால் போற இடமெல்லாம் வறுத்தெடுத்து வருகிறார். சீமானின் இத்தகைய செயல் மிகவும் கண்டனத்துக்குரியது என்று மூத்த பத்திரிக்கையாளரும் சினிமா விமர்சகருமான வலைப்பேச்சு பிஸ்மி கூறியிருக்கிறார்.
அதில் ஒரு அரசியல் கட்சித் தலைவராக இன்னொரு அரசியல் கட்சித் தலைவரை விமர்சிக்க எல்லாருக்கும் உரிமை உண்டு. அதற்கு ஒரு மொழி வேண்டும். ஆனால் சீமான் என்ன செய்கிறார் தெருவில் நடக்கும் முட்டாள் ரசிகன் போல் அணில் என்று சொல்வது, வா போ என்று பேசுவது, விஜய்யினுடைய மக்கள் செல்வாக்கிற்கு முன்பு நீங்கள் நிற்க முடியுமா? அவரின் கால் தூசுக்கு சமமான ஆளா?
கனவு தகந்து விட்டது :
சீமான் விஜயை ஒருமையில் பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். விஜய் ஒரு முட்டாள் நம்ம கூட கூட்டணி வைத்துவிட்டு விஜய் நம்ம சொல்ற பேச்சை எல்லாம் கேட்பார் நாம நல்ல அறுவடை பண்ணலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு தான் விஜய் நம்மளை விட புத்திசாலி தெரிந்துவிட்டது. விஜய்யும் சீமானை ஓரம் தள்ளி வைத்து விட்டார்.
”சீமானின் கனவு தகர்ந்து விட்டது. அதனால் கடுமையாக விமர்சனம் செய்கிறார். இது மிகவும் தவறான விஷயம். அது மட்டுமல்ல விஜயை யார் அரசியலுக்கு வர சொன்னது? என்று கேட்கிறார். அதே கேள்வி தான் நாங்கள் சீமானை பார்த்து கேட்கிறோம். உங்களை யார் அரசியலுக்கு கூப்பிட்டது? தமிழ்நாட்டு மக்கள் திரண்டு வந்து தமிழ்நாட்ட காப்பாத்துங்க ஐயா என்று சொன்னார்களா? ”
ஊரை ஏமாற்றுகிறார் :
”இலங்கைத் தமிழர்களை வைத்து சம்பாதிப்பதற்காக இப்படி கட்சியை ஆரம்பித்து பிரபாகரன் LTTE என்று வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். சீமானை போல் நாளுக்கு நாள் நொடிக்கு நொடி மாறிக் கொண்டிருக்கும் ஒரு ஆளை நாம் பார்க்கவே முடியாது. சீமானைப் பொறுத்தவரை ஒரு நேர்மையற்ற மனிதர். சீமானுடைய பேச்சை இந்த மக்கள் கண்டுக்கவே கூடாது. அப்படி ஒரு நபர் தமிழ்நாட்டு அரசியலில் இல்லை என்ற எண்ணத்திற்கு மக்கள் வரவேண்டும்”. என்று சீமானை சாட்டையடி அடித்துள்ளார்.
