thadi balaji- tvk vijay
சினிமா நடிகர் பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் சேகுவேரா கூறி இருக்கிறார் மேலும் அவர் கூறியவற்றை பார்க்கலாம்.
”தாடி பாலாஜி கடந்த ஒரு மாதம் காலமாக தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். சமீபத்தில் அவரிடம் தொலைபேசியில் பேசினேன். வயிறு பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறதாக கூறியிருந்தார். அவரிடம் பேச்சுவாக்கில் என்ன சார் நீங்க வேலை பார்க்கும் தனியார் தொலைக்காட்சியில் எல்லோருக்கும் ஏதாவது பிரச்சனை வருகிறது”.
”ஒன்று divorce ஆகிறது. இல்லையென்றால் ஏதாவது சர்ச்சையில் சிக்கி விடுகிறார்கள். இல்லையென்றால் உடல்நிலை பாதிக்கப்பட்டு போகிறார்கள். என்ன சார் காரணம் என்று அவரிடம் கேட்டேன். அவரும் இந்த கேள்விக்கு சில சமாளிப்புகளை கொடுத்தார். மேலும் kpy பாலா பற்றி கேட்டேன்”.
”அதற்கு அவர் இப்படி விளம்பரம் செய்யக்கூடாது. நானும் தான் சில உதவிகள் பண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அது வெளியே தெரியாது. இப்படி தேவையற்ற விளம்பரம் செய்வதால்தான் அவருக்கு சிக்கல் ஏற்படுகிறது. என்று சொன்னார். தாடி பாலாஜிக்கு குடல் பிரச்சினை என்று தெரிகிறது”.
”இரண்டு வருடம் முன்பு வரை குடிப்பழக்கம் இருந்ததாகவும் அதன் பிறகு எனக்கு எந்த குடிப்பழக்கமும் இல்லை என்று கூறினார். tvk தரப்பில் விசாரிக்கும் பொழுது அவர் ஏதோ விஜய்க்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார் என்று தகவல் கிடைத்தது. அந்த கடிதம் இப்போது வரை விஜய்க்கு கிடைத்ததா? என்பது தெரியவில்லை. விஜயின் தீவிர விசுவாசி தாடி பாலாஜி ஒருமுறை விஜயின் உருவப்படத்தை அவர் நெஞ்சில் பச்சை குத்தி இருந்தார்”.
தீயாய் வேலை…
சினிமாவில் நடித்து…
Vijay TVK:…
30 வருடங்களுக்கு…
நடிகர் விஜய்…