Connect with us
rajinikanth

Cinema News

ரஜினி என்ன செய்யல.. வாய்க்கு வந்தபடி வரலாறு தெரியாம பேசக்கூடாது.. பிரபலம் ஆவேசம்

விமர்சகர்கள் வைத்த ஆப்பு :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினி. 75 வயதை கடந்தும் இன்றும் ரஜினி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான அவரது ’கூலி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த வருடம் ஆரம்பித்து 8 மாதங்கள் நிறைவடைந்ததையடுத்து தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தும் அளவிற்கு எந்த படமும் வெளியாகவில்லை. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் அந்த வெற்றிடத்தை நிரப்பி இந்த வருடத்தின் மிகப்பெரிய blockbuster கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூலி படம் சறுக்கலை கொடுத்தது.

ரஜினி மீது வன்மம் :

  • அதற்குக் காரணம் youtube ரிவ்யூதான்கள் தான் என்று மூத்த பத்திரிகையாளரும் சினிமா விமர்சகருமான செய்யாறு பாலு கூறியிருக்கிறார் . மேலும் அதில் கூலி படம் நன்றாகத்தான் இருந்தது. இருந்தாலும் ஏன் மக்களிடம் சரியாக எடுபடவில்லை என்றால் அதற்கு காரணம் அந்த படத்திற்கு முதல் நாளிலிருந்து negative விமர்சனங்களை பரப்ப தொடங்கிவிட்டனர்.
  • அந்த படத்தை குனிய குனிய அடித்து ஓடவிட்டார்கள். அப்படி விமர்சனம் செய்தவர்களுக்கு என்ன வன்மம் என்று தெரியவில்லை. அதுமட்டுமில்லை ரஜினி தமிழ்நாட்டிற்கு வந்து கோடி கோடியாய் சம்பாதித்து விட்டார். ஆனால் அவர் திரும்ப இந்த தமிழ்நாட்டிற்கு இதுவுமே செய்யவில்லை என்று சமூக வலைதளங்களில் கூவிக் கொண்டிருக்கின்றனர்.
  • சமீபத்தில் கூட நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு முன்னணி நடிகர்கள் பலரும் பல கோடி ரூபாய் கொடுத்த நிலையில் ரஜினி ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று செய்திகள் பரவி வந்தது. அப்படியெல்லாம் இல்லை ரஜினிகாந்த் விளம்பர பிரியர் கிடையாது. அவர் நிறைய பேருக்கு உதவிகள் செய்திருக்கிறார்.

ரஜினி செய்த உதவி :

அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் மாஸ்டருக்கு மிகப்பெரிய உதவி இன்றுவரை செய்து வருகிறார். அவர் fighter-ராக இருக்கும் காலகட்டத்தில் ரஜினி அவருக்கு என்ன உதவி வேண்டும் என்று கேட்டிருக்கிறார். பீட்டர் என் இரண்டு பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என கேட்டுள்ளார். அன்று தொடங்கி இன்று வரை ரஜினி பீட்டரின் பிள்ளைகளுக்கு school fees College fees என அனைத்தையும் கட்டிக் கொண்டு வருகிறார்.

வாய்க்கு வந்ததை தெரியாமல் பேசக்கூடாது :

இன்று பீட்டர் மாஸ்டர் ஆன பிறகு வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். இருந்தாலும் ரஜினி முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்று சொன்னது போல் அவர்களின் படிப்பு செலவை ஏற்று வருகிறார். சும்மா போற போக்கில் ஒரு மனிதனை போட்டு புரட்டி எடுக்கிறார்கள். ரஜினியை கே பி ஒய் பாலா உடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். இப்படி வாய்க்கு வந்ததை வரலாறு தெரியாமல் பேசக்கூடாது.

என்னதான் அவர் மீது ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும் ரஜினி கரெக்டான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. என்று கூறியுள்ளார்

author avatar
SATHISH G
சதீஷ் பி.இ. பட்டதாரியான இவர் 3 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 2 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top