rajinikanth
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினி. 75 வயதை கடந்தும் இன்றும் ரஜினி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான அவரது ’கூலி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த வருடம் ஆரம்பித்து 8 மாதங்கள் நிறைவடைந்ததையடுத்து தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தும் அளவிற்கு எந்த படமும் வெளியாகவில்லை. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் அந்த வெற்றிடத்தை நிரப்பி இந்த வருடத்தின் மிகப்பெரிய blockbuster கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூலி படம் சறுக்கலை கொடுத்தது.
அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் மாஸ்டருக்கு மிகப்பெரிய உதவி இன்றுவரை செய்து வருகிறார். அவர் fighter-ராக இருக்கும் காலகட்டத்தில் ரஜினி அவருக்கு என்ன உதவி வேண்டும் என்று கேட்டிருக்கிறார். பீட்டர் என் இரண்டு பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என கேட்டுள்ளார். அன்று தொடங்கி இன்று வரை ரஜினி பீட்டரின் பிள்ளைகளுக்கு school fees College fees என அனைத்தையும் கட்டிக் கொண்டு வருகிறார்.
இன்று பீட்டர் மாஸ்டர் ஆன பிறகு வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். இருந்தாலும் ரஜினி முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்று சொன்னது போல் அவர்களின் படிப்பு செலவை ஏற்று வருகிறார். சும்மா போற போக்கில் ஒரு மனிதனை போட்டு புரட்டி எடுக்கிறார்கள். ரஜினியை கே பி ஒய் பாலா உடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். இப்படி வாய்க்கு வந்ததை வரலாறு தெரியாமல் பேசக்கூடாது.
என்னதான் அவர் மீது ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும் ரஜினி கரெக்டான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. என்று கூறியுள்ளார்
OTT: ஓடிடியில்…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…
இளம் ரசிகர்களின்…