1. Home
  2. Cinema News

விஜய் செய்த ரெண்டு தவறால் பலியான அப்பாவிகள்.. சினிமா இன்னும் எத்தனை உயிரை வாங்க போகுதோ..

விஜய் செய்த ரெண்டு தவறால் பலியான அப்பாவிகள்.. சினிமா இன்னும் எத்தனை உயிரை வாங்க போகுதோ..

கரூரில் நடந்த கோர சம்பவம் :

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமையின் போதும் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் விஜய் கரூரில் தனது தேர்தல் பரப்புரையை வழங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் சேர்ந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு சுமார் 39-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகினர்.

இந்நிலையில் இதைப்பற்றி மூத்த பத்திரிகையாளரும் சினிமாவிமர்சகருமானன செய்யாறு பாலு கூறுகையில், “விஜயின் அரசியலை கரூர் சம்பவம் கருவருக்க வந்துள்ளது. தற்போதைக்கு இது விபத்து என்றுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது உண்மையான விபத்துதானா? இல்லையென்றால் இதற்குப்பின் வேறு ஏதும் சதி திட்டங்கள் நடந்திருக்கிறதா? என்று போக போக தான் தெரியும்”.

சரியான திட்டமிடுதல் இல்லை :

”இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசில் தான். திட்டமிடுதல் தவறும் பொழுது தான் தேவையற்ற அசம்பாவிதங்கள் நடைபெறுகிறது. விஜய் அரசியலில் சரசரவென ஏணிப்படியில் ஏறி சென்றார். இந்த கரூர் சம்பவம் அவரைப் பொத்தென்று கீழே இறக்கி விட்டது. இதனால் இனி வரப்போகும் சுற்றுப்பயணமும் தேதி அறிவிக்கப்படாமல் ரத்து செய்யப்பட்டதாக விஜய் தரப்பு அறிவித்துள்ளது”.

”இதேபோல உதாரணத்துக்கு ஒரு சம்பவம் சொல்ல வேண்டும் என்றால் ipl போட்டியில் rcb அணி வெற்றி பெற்ற பின்பு அந்த அணி பெங்களுருவில் ஒரு roadshow செய்ததில் கூட்ட நெரிசலில் சிக்கி சில உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்றது. ஏன் விராட் கோலியை கைது செய்ய வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்தனர்”.

வழிகாட்டுதல் இல்லை :

  • ”இந்த மாதிரி சம்பவத்திற்கெல்லாம் காரணம் முறையான திட்டமிடுதல் இல்லாததுதான். tvk கட்சியில் யாருக்கு என்ன அனுபவம் இருக்கிறது. விஜயகாந்தின் கட்சி சரியும்போது பண்ருட்டி ராமச்சந்திரன் என்பவர் கட்சியை தூக்கிவிட்டார். காரணம் அவருக்கு இருந்த அரசியல் அனுபவம். அதனை பயன்படுத்தி அறிவாக செயல்பட்டார்”.
  • ஆனால் விஜய் தன்னுடைய கட்சிக்கு வழிகாட்ட எந்த ஒரு அரசியல் அனுபவம் கொண்ட ஒரு நபரையும் வைத்து கொல்லவில்லை. அதுதான் விஜய் செய்த தவறு. ரசிகர்களுக்கு சினிமா வேறு அரசியல் வேறு என்று எடுத்து சொல்வதற்கு ஒரு ஆள் இல்லாததுதான் காரணம். என்று கூறியுள்ளார்

விஜய் செய்த ரெண்டு தவறு :

சரியான திட்டமிடுதல் இல்லாதது மற்றும் அரசியல் களத்தில் விஜய்க்கு என்ன செய்ய வேண்டும் என்று எடுத்து சொல்ல முன் அனுபவம் கொண்ட ஆட்கள் இல்லாதது தான் காரணம் என்று செய்யாறு பாலு விமர்சித்துள்ளார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.