குடிக்கு அடம் பிடித்த இளையராஜா.. சின்ன வயசுல இவ்வளவு ஆட்டம் போட்டு இருக்காரா?..
இளையராஜா அறிமுகம்:
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் ஒருவர் இளையராஜா. அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தின் முதல் கம்போசிங்கில் ஸ்டுடியோவில் கரண்ட் கட் ஆனது. இருப்பினும் அவர் போட்ட மெட்டு முதல் படத்திலேயே பட்டித்தொட்டி எங்கும் தனது பாடல்களை ஹிட் கொடுத்து பிரபலமானார்.
இளையராஜா சாதனை:
அதன் பிறகு இளையராஜா எண்பதுகளில் நம்பர் ஒன் இசையமைப்பாளராக வலம் வந்தார். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என அனைத்து மொழியிலும் சுமார் 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை புரிந்துள்ளார். இவரின் பாடல்கள் இன்றும் தமிழ் படங்களில் பயன்படுத்தப்படுகிறது.
இன்று வரும் படங்களின் வெற்றிக்கு கூட இவரின் பாடல்கள் காரணமாக அமைகிறது.
சிம்பொனி இசையால் உலகப் புகழ்:
இளையராஜா அண்மையில் லண்டனில் சிம்பொனிசையை அரங்கேற்றினார். இதனால் இந்தியாவிலிருந்து முதல் முறை ஒரு இசையமைப்பாளர் சிம்பொனியை அரங்கேற்றியுள்ளார் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் இளையராஜா. இதனால் தமிழ்நாடு அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த வாரம் சென்னையில் பிரமாண்டமாக விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் முதலமைச்சர் ஸ்டாலின் உடன் உதயநிதி ஸ்டாலின் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாசர், சத்யராஜ், பிரபு என பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொருதரும் இளையராஜா பற்றி புகழ்ந்து கொண்டிருக்கையில் ரஜினி மட்டும் இளையராஜா அந்த காலத்தில் போட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
ரஜினி வெளியிட்ட ரகசியம்:
’அதில் ஜானி படத்தின் ஷூட்டிங்கிற்காக ஹோட்டலில் நானும் இயக்குனர் மகேந்திரனும் தங்கியிருந்தோம் அங்கு வந்த இளையராஜா அரைபாட்டில் பீர் அடித்து அவ்வளவு ஆட்டம் போட்டார். அதோடு மட்டுமல்லாமல் நடிகைகளைப் பற்றி கிசுகிசு கேட்டார். அண்ணன் அந்த காலத்தில் செம லவ் அதனால்தான் இப்படி பாடல்கள் வருகிறது’ என்று கூறியிருந்தார். இளையராஜாவின் தனிப்பட்ட வாழ்க்கையை மேடையிலே அம்பலப்படுத்தினார் ரஜினி.
இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளரும் சினிமா விமர்சகருமான செய்யாறு பாலு மேலும் இளையராஜா பற்றிய புதிய தகவலை ஒன்றை கூறியுள்ளார் அதில்,” பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவின் அறிமுகப்படுத்தியதில் எவ்வளவு முக்கியமான ஆளோ அதேபோலத்தான் இயக்குனரும் கதாசிரியருமான ஆர் செல்வராஜ். அதில் மாற்று கருத்து கிடையாது. எல்லாம் சமகாலங்களில் பயணித்தவர்கள்.
குடிக்கு சண்டை போட்ட இளையராஜா:
பஞ்சு அருணாச்சலத்திடம் செல்வராஜ் இளையராஜாவை அறிமுகப்படுத்துகிறார். அந்த சமயத்தில் பஞ்சு அவர்கள் மது அருந்தி கொண்டிருக்கிறார். உடனே அவர் விசாரிக்கிறார் நீ யாரிடம் உதவியாளராக இருந்தாய் என்று. உடனே நாளை ஹோட்டலில் வந்து என்னை பார்க்குமாறு இளையராஜாவிடம் சொல்கிறார். அதன் பின் மது குடுப்பியா என்று கேட்கிறார்.
இடையில் ஆர் செல்வராஜ் குறுக்கிட்டு ‘இல்ல அண்ணே வேண்டாம்’னு சொல்லி இளையராஜாவை அனுப்பி வைத்துவிட்டார். பஞ்சு அருணாச்சலத்துடன் செல்வராஜ் பேசிவிட்டு வெளியே வருகிறார். ரோட்டின் முனையில் நின்று கொண்டிருந்த இளையராஜா ஆர் செல்வராசுடன் சண்டை போடுகிறார். அவரே குடின்னு சொல்றாரு.. உனக்கு என்ன?’ என்று கேட்டுள்ளார். பிறகு இருவரும் சமரசமாக சென்று விட்டனர். இந்த தகவலை செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.
சமூக சீர்கேடு:
பொது விழாக்களில் ரஜினி, இளையராஜா பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர்களை பின்பற்றும் ஏராளமான ரசிகர்களுக்கு குடி ஆர்வத்தை தூண்டுவது போல் இருந்துள்ளது. இவர்களைப் போன்ற முன்னணி ஜாம்பவான்கள் குடிக்கு எதிராக பேச வேண்டுமே தவிர அதை ஊக்கப்படுத்த கூடாது. இப்படி மேடையில் பேசியதை கொண்டாட வேண்டாம் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
