manoj - bharathiraja
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பாரதிராஜா. தன்னுடைய படங்களில் புதுமை புகுத்தி அதுவரை வந்து கொண்டிருந்த படங்களிலிருந்து சற்று மாறுபட்டு சீர்திருத்த சினிமாவை கொண்டு வந்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகரத்தியவர் பாரதிராஜாதான்.
சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தாலும் தன்னுடைய மகன் மனோஜை சினிமாவில் முன்னுக்கு கொண்டுவர போராடினார். ஆனால் மக்களின் ஆதரவு பாரதிராஜாவுக்கு கிடைத்தது போல் மனோஜ்க்கு கிடைக்கவில்லை. அவர் நடித்த எந்த படங்களும் பெரிதாக கவனிக்கப்படவில்லை. மேலும் மனோஜ் தன்னை ஒரு நடிகர், இயக்குனர் என்று தன்னை தக்க வைக்க போராடினாலும் அவரால் முன்னுக்கு வர முடியவில்லை.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் உடல்நிலை கோளாறு காரணமாக மனோஜ் உயிரிழந்தார். இதனால் பாரதிராஜா மிகவும் மன வருத்தத்திற்கு ஆளானார். ’இவ்வளவு இளம் வயதிலேயே என் மகன் போய்விட்டாரே திரையைத் துறையில் அவன் முன்னுக்கு வர நான் உதவி செய்திருக்கணும்’ என்று இதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்த பாரதிராஜாவுக்கு தற்போது உடல்நிலை மிகவும் மோசமாகி சுயநினைவு இல்லாமல் இருப்பதாக மூத்த பத்திரிக்கையாளர் நடிகர் பயில்வான் ரங்கநாதர் கூறியிருக்கிறார்.
Vijay TVK:…
30 வருடங்களுக்கு…
நடிகர் விஜய்…
கடந்த சில…
நடிகர் விஜய்…