சுயநினைவை இழந்த பாரதிராஜா.. மகனை இழந்த துக்கத்தால் ஏற்பட்ட பரிதாப நிலை..
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பாரதிராஜா. தன்னுடைய படங்களில் புதுமை புகுத்தி அதுவரை வந்து கொண்டிருந்த படங்களிலிருந்து சற்று மாறுபட்டு சீர்திருத்த சினிமாவை கொண்டு வந்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகரத்தியவர் பாரதிராஜாதான்.
மனோஜ் மரணம் :
சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தாலும் தன்னுடைய மகன் மனோஜை சினிமாவில் முன்னுக்கு கொண்டுவர போராடினார். ஆனால் மக்களின் ஆதரவு பாரதிராஜாவுக்கு கிடைத்தது போல் மனோஜ்க்கு கிடைக்கவில்லை. அவர் நடித்த எந்த படங்களும் பெரிதாக கவனிக்கப்படவில்லை. மேலும் மனோஜ் தன்னை ஒரு நடிகர், இயக்குனர் என்று தன்னை தக்க வைக்க போராடினாலும் அவரால் முன்னுக்கு வர முடியவில்லை.
பாரதிராஜா வருத்தம் :
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் உடல்நிலை கோளாறு காரணமாக மனோஜ் உயிரிழந்தார். இதனால் பாரதிராஜா மிகவும் மன வருத்தத்திற்கு ஆளானார். ’இவ்வளவு இளம் வயதிலேயே என் மகன் போய்விட்டாரே திரையைத் துறையில் அவன் முன்னுக்கு வர நான் உதவி செய்திருக்கணும்’ என்று இதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்த பாரதிராஜாவுக்கு தற்போது உடல்நிலை மிகவும் மோசமாகி சுயநினைவு இல்லாமல் இருப்பதாக மூத்த பத்திரிக்கையாளர் நடிகர் பயில்வான் ரங்கநாதர் கூறியிருக்கிறார்.
பாரதிராஜா உடல்நிலை கவலைக்கிடம் :
- மேலும் அதில்,” பாரதிராஜா தற்போது சுய நினைவின்றி இருக்கிறார். அவர் தங்கி இருக்கும் வீட்டிற்கு வர யாருக்கும் அனுமதி இல்லை. அவரை தனியாக ஒரு மருத்துவர் மற்றும் செவிலியரை வைத்து சிகிச்சை கொடுத்துக்கொண்டு வருகிறார்கள். அது மட்டும் இல்லை பாரதிராஜா யாரையாவது பார்த்து விட்டார் என்றால் அவரைப் பார்த்து தேம்பி தேம்பி அழுது கொண்டிருக்கிறாராம்.
- அது இன்னும் அவருக்கு pressure-ஐ அதிகமாகிறது. இந்த தகவலை எல்லாம் பாரதிராஜாவின் சகோதரர்தான் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் சொல்ல வருவது யாரும் பாரதிராஜாவை பார்க்க வராதீர்கள். வந்தால் இன்னும் அவரின் நிலைமை மோசமாகிவிடும்”.
- ”சோகத்தின் பெரிய சோகம் புத்திர சோகம்தான். மனோஜ் உயிரிழந்த பிறகு மிகவும் ஒடிந்து விட்டார் பாரதிராஜா. கோடி கோடியாய் சொத்து இருந்தும் மனதில் நிம்மதி இல்லை என்றால் வாழ்க்கை மிகவும் மோசமாகிவிடும். பாரதிராஜா தற்போது அந்தக் கட்டத்திற்கு தள்ளப்பட்டு விட்டார். அவர் விரைந்து குணமடைந்து மீண்டும் இயக்குனர் இமயமாய் வர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்”. என்று கூறியுள்ளார்.
