
Cinema News
விஜயின் அரசியல் ஆசைக்கு எண்டு கார்டு போட்டாச்சு?.. தவெக செஞ்ச பெரிய தப்பே இதுதான்..
கரூரில் விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டு சுமார் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுக்க பரபரப்பாகியது. விஜயும் இதற்கு எந்த ஒரு பதிலும் சொல்லாமல் கரூரிலிருந்து சென்னை புறப்பட்டார்.
கரூர் சம்பவம் Man made disaster :
இந்நிலையில் பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே இந்த சம்பவத்தைப் பற்றி விளக்கியுள்ளார். ”கரூரில் நடந்த இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியுள்ளது. இதை Man made disaster என்றுதான் சொல்ல வேண்டும். முழுக்க முழுக்க மனித தவறுகளால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. விஜய் மீது தவறு இருக்கிறதா? அல்லது அரசாங்கத்தின் மீது தவறு இருக்கிறதா? என்பதை விசாரணைக்கு பின் தான் தெரிய வரும்.

திசை மாற்றும் ஊடகம் :
ஊடகங்களும் விஜய் எங்கிருக்கிறார். எந்த வீட்டில் இருந்து எந்த வீட்டுக்கு போகிறார் என்று அவர் மீது முழு கவனத்தையும் வைக்கிறதே தவிர பிரச்சனைக்கான காரணத்தை அலச அவர்கள் முன் வரவில்லை. விஜய் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசவில்லை என்று கூறுகிறார்கள் அவர் ஏன்? பத்திரிக்கையாளர்களை சந்திக்க வேண்டும்.
விஜய் இரங்கல் :
இறப்பிற்கு இரங்கல் தெரிவித்தார். அதுமட்டுமில்லை தமிழ்நாடு அரசை விட இரண்டு மடங்கு இழப்பிடு தொகை அறிவித்தார். அவர் களத்திற்கு நேராக சென்று பார்க்காததற்கு காரணம் அதிகாரிகள் அவருக்கு அனுமதி கொடுக்கவில்லை. தவெக நிர்வாகிகள் organise செய்ததில் மிகப்பெரிய தவறை செய்துள்ளனர். இதேபோல விஜய் ஜனநாயகன் படத்திற்காக கொடைக்கானலுக்கு ஷூட்டிங் செல்லும் பொழுது முன்கூட்டியே அவர் வாகனத்தை தொடர வேண்டாம் என்று அறிவித்தார்கள்.
சரியான திட்டமிடுதல் இல்லை :
அதேபோல கூட்டமும் வரவில்லை. யாரும் அவரை தொந்தரவும் செய்யவில்லை. இதேபோல் கரூரில் இந்த மாதிரியான காரியங்களுக்கு முன்னதாகவே பிளான் பண்ணி இருக்கணும். குறிப்பாக சிட்டிக்கு வெளியில் இடம் தேர்ந்தெடுக்க வேண்டும். விஜய் சிட்டிக்கு வெளியில் கூட்டம் போட்டால் வராமலா போய்விடும்.
”அதேபோல விஜய் ஏர்போட்டில் இருந்து தேர்தல் பரப்புரை நடத்தும் இடத்திற்கு வர 4 முதல் 5 மணி நேரம் ஆகின்றது. கட்சி நிர்வாகிகள் தலைவர் வருகிறார் அவரை இடையூறு செய்யாமல் இருங்கள் என்றால் எந்த பிரச்சினையும் இருக்காது. அவரும் குறித்த நேரத்திற்கு பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு வரப் போகிறார். தவெக நிர்வாகிகள் செய்யும் பெரிய தப்பு இதுதான். விஜய் உடன் நேர்காணல் காணும் வாய்ப்பு ஏற்பட்டால் அவரிடம் 150 கேள்வி கேட்பேன்”. என்று கூறியுள்ளார்.
- கரூர் சம்பவம் விஜய்க்கு நாளுக்கு நாள் அழுத்தத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது.
- இனிமேல் விஜயின் அரசியல் பயணம் work from home அரசியலாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
- விஜய் வெளியே வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு கரூர் சம்பவம் சிறந்த உதாரணம்.