அடுத்த நூறு வருஷத்துக்கு கமல் ட்ரோல் மெட்டீரியல் தான்.. ஆண்டவரு வசமா மாட்டிக்கினாரு..
வித்தகன் கமல் :
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவர் கமல். இவருக்கு சினிமாவில் தெரியாத வேலைகளே கிடையாது. ஒரு நடிகராக மட்டுமின்றி எழுத்தாளர், இயக்குனர், பாடல் ஆசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என அனைத்து துறைகளிலும் சாதித்துக் காட்டியிருக்கிறார். இன்றும் சினிமாவில் இவருக்கு இருக்கும் knowledge எந்த நடிகருக்கும் இருக்காது என்று தைரியமாக சொல்லலாம்.
அமெரிக்காவில் சினிமா சம்பந்தமாக புதிதாக என்ன கண்டுபிடித்தாலும் உடனுக்குடன் update-டாக வைத்திருப்பார். 65 வயதை கடந்தும் இன்றும் சினிமாவில் சாதிப்பதற்காக அமெரிக்காவில் AI படிக்க செல்கிறார். கமலை பொருத்தவரையில் கற்றல் என்பது தீராத பசியாக இருக்கிறது. கிடைக்கிற Gapகளில் சினிமாவில் ஏதாவது கற்றறிந்து தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்.
ஜால்ரா தட்டிய கமல் :
சினிமாவில் உச்சம் தொட்ட பின் அரசியலுக்கு வருவது என்பது நடிகர்களின் வழக்கமாக இருக்கிறது. அதைப் போல கமலும் ’மக்கள் நீதி மையம்’ என்ற கட்சியை துவங்கி அரசியலில் களம் இறங்கினார். கட்சி ஆரம்பித்த புதிதில் திமுகவுக்கு எதிராக செயல்பட்டார். திமுகவுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார். ஆனால் தற்போது அதே திமுகவுடன் இணைந்து கூட்டணி வைத்து mp-யாக டெல்லியில் உட்கார்ந்துள்ளார்.
இதனை பற்றி மூத்த பத்திரிக்கையாளரும் சினிமா விமர்சகருமான வலைப்பேச்சு பிஸ்மி கூறுகையில் சமீபத்தில் கமல்ஹாசன் torchlight-டை தூக்கி tv-யில் அடிக்கும் வீடியோ இணையதளத்தில் ட்ரெண்டாகி வந்தது. அதேபோல இளையராஜா பாராட்டு விழாவில் கூட திமுக அரசை பற்றி பெரிதும் பேசாமல் ஒரு சில வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு ஒதுங்கி விட்டார்.
troll material கமல் :
இயல்பாக இது எல்லாருக்கும் இருப்பதுதான். கமல்ஹாசன் திமுகவில் இணைந்தது குறித்து ஒரு விளக்கம் கொடுத்தால் சில விமர்சனங்களை எதிர்காலத்தில் அவர் தவிர்க்கலாம். இதற்கு முன்னர் அவர் திமுக குடும்ப அரசியல் செய்கிறார்கள் ஊழல்வாதிகள், கொள்ளை அடித்து சேர்த்த பணம் என்று சொன்னார். ஆனால் இன்று திமுகவுடன் ஆதரவாளராக நிற்கிறார். இதுதான் இவர் troll material-லாக உருவாக காரணமாக அமைந்தது.
இது இன்று மட்டும் இல்லை, இன்னும் நூறு வருடங்கள் ஆனாலும் இந்த விஷயங்கள் அவர் மீது வரும். அதில் எந்த மாற்றமும் இல்லை. இதை தடுக்க வேண்டுமென்றால் தன்னிலை விளம்பரம் கொடுத்தாக வேண்டும் அதில் ’ஸ்டாலின் குடும்பம் மக்கள் பணத்தை கொள்ளை அடித்ததாக அன்று சொன்னேன். அதற்காக டார்ச்லைட் எல்லாம் போட்டு உடைத்தேன். ஆனால் தற்போது நெருங்கி விசாரிக்கும் போது தான் தெரிகிறது அவர்கள் அப்படி கிடையாது’.
’வயலில் ஏறு உழுது தான் இந்த பணத்தை எல்லாம் சேர்த்தார்கள் என்று அன்னைக்கு நான் தெரியாமல் சொல்லி விட்டேன்’ என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார். விளக்கம் கொடுத்தால் அவர் தேவையில்லாத விமர்சனங்களில் இருந்து தப்பிப்பார். அதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி இந்த மாதிரி விளக்கம் கொடுத்தாலும் மக்கள் கண்டிப்பாக நம்ப மாட்டார்கள்”. என்று கூறியுள்ளார்.
