இறப்பதற்கு முன் நடந்த சம்பவம்.. கண்கலங்க வைத்த இறுதி நிமிடங்கள்..
காமெடியன் ரோபோ சங்கர் :
Stand up comedian ரோபோ சங்கர் நேற்று காலமானார். அவரின் இறப்பிற்கு திரையில் உலகில் உள்ள அனைவரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாரும் சினிமா விமர்சகருமான சுபிர் ரோபோ சங்கரின் கடைசி நிமிடங்களை பகிர்ந்துள்ளார் அதில்
”மதுரையில் கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில் தனது உடம்பு முழுவதும் பெயிண்ட் அடித்துக் கொண்டு ரோபோ மாதிரி நடனமாடியதால் இவருக்கு ரோபோ ஷங்கர் என்று பெயர் வந்தது. அதன் பிறகு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று சென்னை வந்த அவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் security-யாக வேலை பார்த்தார்”.
”அது மட்டும் இல்லாமல் கிடைக்கிற வேலைகளில் எல்லாம் முழு கவனம் செலுத்தி வந்தார். மற்றொருபுறம் வாய்ப்புகளுக்காக அலைந்து கொண்டிருந்தார். அதன் பிறகு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இன்று பிளாக் ஷீப் சேனலில் இருக்கும் சுட்டி அரவிந்த் உடன் ரோபோ சங்கர் இணைந்து காமெடி சரவெடி நடத்துவார்கள்”.
மறுபிறப்பு :
”அதன் பிறகு பல டிவி நிகழ்ச்சிகள், சினிமா திரைப்படங்கள் என்று பயணிக்க ஆரம்பித்தார். இப்படி போய்க்கொண்டிருந்த ரோபோ சங்கருக்கு இரண்டு வருடங்களுக்கு முன் ரத்த வாந்தி எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. தீவிர சிகிச்சைக்குப் பின் குணமானார். அந்த சமயத்தில் இவர் பிழைத்ததே பெரிது”.
”அதன் பிறகு சமீபத்தில் அவரை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன் அதில் அவர் performance செய்யும்போது அப்பவே வாய் குழறியது. மீண்டும் இந்த மனுஷன் ஆரம்பிச்சுட்டாரா? என்று நினைத்தேன். பல மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டாலும் ரோபோவின் நிறுத்த முடியாத குடிப்பழக்கம் அவரை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது”.
சுய கட்டுப்பாடு இல்லை :
”சமீபத்தில் கூட குடிக்கு எதிராக அவரே awareness video போட்டார். போட்ட கொஞ்ச நாளில் மீண்டும் அந்த பக்கம் சென்று விட்டார். சினிமாவில் இந்த மாதிரி நிறைய சம்பவங்களை சொல்லலாம். சுருளிராஜன் காலத்திலிருந்து இன்று ரோபோ சங்கர் வரை நிறைய நிகழ்ந்துள்ளது. ஒரு மனிதன் தனது கட்டுப்பாட்டை மீறி அவன் இந்த உலகில் வாழ்கிறான் என்றால் அவனுக்கு வரும் துன்பத்தை எவனாலும் தடுக்க முடியாது என்று இந்த மாதிரி சம்பவங்கள் உணர்த்துகிறது”. என்று தெரிவித்துள்ளார்.
