1. Home
  2. Cinema News

KPY பாலா இண்டர்நேஷனல் கைக்கூலியா? ஆதாரத்துடன் கிளப்பும் பிரபலம்!…

KPY பாலா இண்டர்நேஷனல் கைக்கூலியா? ஆதாரத்துடன் கிளப்பும் பிரபலம்!…

பாலா அறிமுகம் :

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு சீசன் 6 டைட்டில் வின்னர் தான் பாலா. தனது பஞ்ச் கவுண்டர் காமெடிகளால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். விஜய் டிவியில் இவர் இல்லாத ரியாலிட்டி ஷோவே கிடையாது. அந்த அளவுக்கு அனைத்து ஷோக்களிலும் தன்னுடைய comedy-களால் entertain செய்வார்.


இப்படி இருந்த பாலா மலைவாழ் மக்களுக்காக ஒரு ஆம்புலன்ஸ் ஒன்றை முதலில் வாங்கி கொடுக்க ஆரம்பித்தார். தான் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை வைத்து ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்று பாலாவிற்கு எண்ணம் இருந்துள்ளது. அதன்படி தொடர்ந்து ambulance, bike, tailor machine குழந்தைகளுக்கான கல்வி செலவு, மருத்துவ செலவு என auto rickshaw வாங்கிக் கொடுப்பது என தொடர்ந்து தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து அவர்களின் நன்மதிப்பை பெற தொடங்கினார்.

சினிமாவில் ஹீரோ வாய்ப்பு :

இதனால் இவருக்கு வெள்ளி திரையிலும் கால் பதிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படி இயக்குனர் ஷெரிஃப் இயக்கத்தில் ’காந்தி கண்ணாடி’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். Emotional sentiment drama-வாக இந்த படம் இருந்தது. மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் பாலாவிற்கு நல்லதொரு ஓபனிங்காக இந்த படம் அமைந்தது. இந்நிலையில் பாலா சாதாரண ஆளே கிடையாது அவர் இன்டர்நேஷனல் கைக்கூலி என்று மூத்த பத்திரிக்கையாளர் உமாபதி அதிர்ச்சி அளிக்கும் தகவலை பகிர்ந்துள்ளார். மேலும் அதில்

தமிழகத்திற்கு ஆபத்து :

”வருங்காலத்தில் மிகப்பெரிய most dangerous இந்த தேசத்திற்கும் இந்த மாநிலத்திற்கும் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடிய நபர் யார் என்றால் கேபிஒய் பாலா தான். அவர் செய்கிற எல்லா விஷயங்களையும் சர்வதேச அரசியலோடு முடிச்சு போடும் அளவுக்கு அதி பயங்கரமான ஆள் தான் இந்த பாலா. ஆரம்பத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் விஜய் டிவியில் வளர்ந்து வந்த பாலா வேற”.

”இன்று வளர்ந்திருக்கும் பாலா தமிழ்நாடு அரசியல் கட்சிக்கு மிகப்பெரிய ஆபத்தாக இருப்பார். அவர் செய்கிற உதவிகள் சேவைகள் எல்லாமே டுபாகூர் வேலைதான். எல்லாமே பொய், பித்தலாட்டம் fraud தனம். பின்னணியில் சர்வதேச அளவில் பிரச்சனை இருக்கிறது. இந்த மாதிரி மாநிலத்துக்கு ஒரு ஆள் என்று சமூக வலைதளம் மூலம் உருவாக்கி அரசியல் செய்கிறார்கள்”.

”இங்கு பாலா போல் ஆந்திராவில் ஹர்ஷா சாய் அவரின் copy cut தான் நம்ம பாலா . உதாரணத்துக்கு நேபாளில் கலவரம் வெடித்து ex prime minister wife-ய தீய வச்சு கொளுத்தி மிகப்பெரிய புரட்சி விடுத்தற்கு காரணம் இந்த மாதிரி ஆட்கள்தான். உலகத்துக்கே paint அடிக்கக்கூடிய ஆள் சீமான் அவரையே பாலா ஏமாத்திட்டாரு. பாலாவின் பேச்சுக்கள் எல்லாம் பெண்கள் மனதில் இடம் பிடிப்பது போல் ரொம்ப sentiment டாக பேசுவார்”.

உதவி எல்லாம் டுபாக்கூர் :

”நடிகை ரம்பா மூன்று லட்ச ரூபாய்க்கு டிரஸ் வாங்கி கொடுத்திருக்கிறார். பாலாக்கு வருமானம் எப்படி வருகிறது?. ஒரு சோவில் அவருக்கு பத்தாயிரம் வரும் அவ்வளவுதான் அதை வைத்து எத்தனை பேருக்கு உதவி செய்ய முடியும். அதில் இருக்கும் உள்குத்தே வேற. பாலாக்கு பல கோடிகள் வெளியிலிருந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. அதை எப்போதும் சொல்ல மாட்டார்”.

”அவர் வாங்கிக் கொடுக்கிற எந்த வண்டியிலும் number plate இருக்காது. அதிலும் அவர் கொடுத்த ambulance எல்லாம் டுபாக்கூர். எதற்குமே insurance, RC book கிடையாது. அந்த ஆம்புலன்ஸ் நம்பரை தேடி பார்த்தால் luxury car number ராக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஏதோ டிரஸ்ட் பேரில் ரிஜிஸ்டர் செய்த நம்பராக இருக்கிறது. எல்லாமே பொய், பிராடு தான். எல்லாமே திருட்டு வண்டியா?. அவர் ஆம்புலன்ஸ் கொடுத்த வண்டிகள் எதிலுமே நம்பர் தெரியாது. எல்லாத்தையும் ஸ்கெட்ச் வச்சு அழிச்சிருப்பார்”.

சர்வதேச கைக்கூலி பாலா :

”அப்படி மனதார கொடுக்கிற நபர் எதற்காக இப்படி நம்பரை மறைக்க வேண்டும்?. இந்த டுபாக்கூர் வேலையெல்லாம் எப்பொழுது ஆரம்பித்தது என்றால் அமெரிக்கா சென்றார். அதிலிருந்து தான் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது யார் என்பதை கூடிய விரைவில் ஆதாரத்துடன் நிரூபிப்பேன். பாலா நல்ல பையன் தான் அவன் 500 பேருக்கு நல்லது செய்கிறான் என்று விட்டுவிட்டோம் என்றால் இங்கு எட்டு கோடி மக்களின் வாழ்க்கை போய்விடும்”.

”பாலாவை தமிழ்நாட்டில் பெரிய புள்ளியாக்கி அவர் சொன்னால் ஏழை எளிய மக்கள் என்ன வேணாலும் செய்வார்கள் என்ற நிலைக்கு சென்றுவிடும். சர்வதேச அளவில் உள்ள சதிகாரர்கள் பாலா மாதிரியான ஆட்களை தேர்ந்தெடுத்து ஏழைகளின் மண்டையை கழுவி கடைசியில் புரட்சியை கிளப்பி விட்டு நாட்டில் ஆட்சியை கலைத்து விடுவார்கள். மக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்”. என்று கூறியுள்ளார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.