
Cinema News
விஜய்க்கு உச்சகட்ட தெனாவட்டு.. அந்த நாலு பேரும் சேர்ந்து விஜயை ஒழிச்சுட்டாங்க..
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். இரண்டு மாநில மாநாடுகளை வெற்றிகரமாக முடித்த விஜய் தற்போது மாவட்ட வாரியாக தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் கரூரில் தேர்தல் பரப்புரை கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது விஜயை காண கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு சுமார் 40க்கு மேற்பட்டோர் பலியாகினர். சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது.
விஜய் ரசிகர்களின் அட்டகாசம் :
இந்த சம்பவத்திற்கான காரணத்தை பற்றி மூத்த பத்திரிக்கையாளர் உமாபதி விளக்கியுள்ளார். அதில்,” கரூரில் அன்று விஜயை பார்ப்பதற்கு 28,000 பேர் கூடியுள்ளனர். Un organised தற்குறி கூட்டங்களால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விஜய் பார்ப்பதற்கு அவர் வந்திருந்த பஸ்ஸில் ஏறுவது, அங்கு சுற்றி இருந்த குடியிருப்பு பகுதி வீட்டின் மேல் ஏறுவது, கூறைகளை கிழித்துக்கொண்டு வருவது, கரண்ட் கம்பத்துல காக்கா, குரங்கு கூட ஏறாது”.

”ஆனால் இந்த தற்குறிகள் அதன் மேல் ஏறுகிறார்கள். இந்த மாதிரி அடிப்படை அறிவில்லாத தற்குறி கூட்டங்கள்தான் விஜய் சுற்றியுள்ளது. இது தமிழ் மக்களுக்கு தமிழ்நாட்டுக்கே பெரிய அவமானம். அந்த தற்குறி கூட்டங்கள்தான் இப்போது விஜய்க்கே வெடி வைத்து விட்டனர். இது ஒரு பக்கம் இருக்க அந்த பக்கத்தில் கதை இன்னும் மோசமாக இருக்கிறது”.
விஜயை சோலி முடித்த அந்த நாலு பேர் :
”tvk கட்சிக்கு தன்னுடைய கட்சிக்காரர்கள் மீது நம்பிக்கை இல்லை. அதை சுற்றி சில டுபாக்கூர் கூட்டங்கள் இருக்கிறது. அதில் நான்கு பேர் மிக முக்கியமானவர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஜெகதீஷ், அருண் ராஜ் இந்த நான்கு பேரை தாண்டி வேற யாரும் விஜய் சந்திக்க முடியாது.
”கட்சிக்குள்ம் இந்த நான்கு பேர் தாண்டி வேற யாரும் வந்து விடமுடியாது. விஜய் கிட்ட வர வேண்டுமென்றாலும் நம்மளை சந்தித்து விட்டு தான் செல்ல வேண்டும். என்று திட்டம் போட்டு செயல்பட்டு வருகிறார்கள். இந்த நான்கு பேரும் சேர்ந்து விஜயை ஒழித்துக் கட்டி விட்டார்கள். ஒரு கட்சி என்று எடுத்துக்கொண்டால் உள்கட்டமைப்பு வேண்டும். விஜய் மற்ற கட்சிகளிடமிருந்து இதையாவது கற்றுக் கொள்ள வேண்டும்”.
”ஒழுங்கான கட்டமைப்பு இருந்தால் மட்டும்தான் கட்சி correct ஆக இருக்கும். இல்லையென்றால் என்னைக்காவது ஒரு நாள் மொத்தமா குழியில் போய் மூடிரும். இதுதான் இன்று நடந்துள்ளது”. என்று கூறியுள்ளார்
கருத்து :
- அந்த நாலு பேர் கிட்ட இருந்து விஜயை காப்பாத்தணும் என்று இவர்களைப் பற்றி ஏற்கனவே நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார்.
- அப்பொழுது மக்கள் அவர்களை கிண்டல் செய்தனர்.
- இன்று அவர் சொன்னது போலவே நடந்திருக்கிறது.