Categories: Cinema News latest news

நீ தினக்கூலியா? தவறை மறைக்க kpy பாலா பண்ணிய பித்தலாட்டம்… உமாபதியின் பகீர் தகவல்கள்..

காமெடியன் kpy பாலா :

விஜய் டிவியின் famous காமெடி நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு season 6 title winner தான் kpy பாலா. தன்னுடைய கவுண்டர் காமெடியால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். தான் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை பாலாவுக்கு காந்தி கண்ணாடி திரைப்படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது.

சர்வதேச கைக்கூலி :

பாலா இன்று மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாவதற்கு முக்கிய காரணம் அவர் ஏழை எளிய மக்களுக்கு செய்து வரும் உதவிதான். ஆனால் இன்று அதுவே அவருக்கு எதிராக திரும்பி உள்ளது. அறம் நாடு youtube சேனலில் பிரபல பத்திரிகையாளர் உமாபதி பாலா ஒரு சர்வதேச கைக்கூலி அவரால் தமிழ்நாட்டுக்கு பேராபத்து என்று சமீபத்தில் அவரைப் பற்றி கூறி பீதியை கிளப்பினார்.

அதற்கு kpy பாலாவும்,’ நான் சர்வதேச கைக்கூலி இல்லை நானே ஒரு தின கூலி ஒரு படம் நடித்தேன். அதன் பிறகு ஒரு மருத்துவமனை கட்ட போறேன் என்று சொன்னேன் அதற்கு இவ்வளவு அக்கப்போரா?’ என்று சமீபத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் உமாபதி மீண்டும் பாலா செய்த பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தி உள்ளார்.

பாலா செய்த தில்லுமுல்லு வேலை :

அதில் பாலாவை சில அந்நிய சக்திகள் பயன்படுத்தி அவரை மூலப்பொருளாக வைத்து மிகப்பெரிய அளவில் சம்பவம் செய்ய இருக்கிறார்கள். அது அரசியல் அறுவடையாக கூட இருக்கலாம். இதுதான் நான் அந்நிய கைக்கூலி என்று சொன்னேன். அதை செய்வதற்கான முயற்சியில்தான் இப்போது இருக்கிறார்கள். அதில் பாதி கிணற்றை தாண்டி விட்டார்கள் என்பதுதான் உண்மை.

பாலா தற்போது என்ன சொல்கிறார் என்றால் மக்கள் பார்த்துக் கொள்கிறார்கள். என்று சொல்கிறார். இதைத்தான் நான் சர்வதேச கை கூலி என்று சொன்னேன். இப்பவும் தம்பி ஏமாளி தான். இப்படிதான் தம்பியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ‌அவர் வாங்கிக் கொடுத்த ஆம்புலன்ஸ் எல்லாமே போலிதான். அவர் கொடுத்த ஆம்புலன்ஸ் எல்லாமே 30 வருஷம் பழமையான வண்டிகள் இதை வைத்து ரோட்டில் ஓட்டுவதே பெரிய தவறு.

எல்லாம் டுபாகூர் வேலை :

ஆனால் மக்களை காப்பாற்ற இந்த வண்டியை கொடுத்திருக்கிறார் பாலா. அது மட்டும் இல்லை இதற்கு fake insurance போட்டுக் கொடுத்து இருக்கிறார்கள். ஆம்புலன்ஸ் கொடுத்தேன் என்று சொன்னதே டுபாக்கூர் வேலை. அதிலும் ஃபேக் இன்சூரன்ஸ், போலி ஆர்சி புக் ரெடி பண்ணி கொடுத்தது எல்லாம் எவ்வளவு பெரிய குற்றம்.

சோசியல் மீடியா ஆயுதம் :

அதுவும் இவர் எடுத்துப் போடும் வீடியோ அனைத்தும் எல்லாமே ஸ்கிரிப்ட் தான். அந்த வீடியோவை அவர் instagramல் மட்டும்தான் போடுவார். யூடியூபில் போட மாட்டார். ஏனென்றால் அதுக்கும் அந்த கார்ப்பரேட் கம்பெனியுடன் அக்ரீமெண்ட் இருக்கு. சோசியல் மீடியாவில் வசமாக சிக்கி இருக்கும் இந்த பாலாவை மீட்க வேண்டும் மேலும் பாலாவால் யாரும் அறுவடை செய்யப்படக்கூடாது என்பதற்காகவே நான் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். என்று கூறியுள்ளார்

SATHISH G
சதீஷ் பி.இ. பட்டதாரியான இவர் 3 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 2 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
SATHISH G