பாலிவுட்டில் கர்ஜிக்கும் ஜூனியர் என்டிஆர்!.. பிறந்தநாள் அதுவும் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!..

by SARANYA |
பாலிவுட்டில் கர்ஜிக்கும் ஜூனியர் என்டிஆர்!.. பிறந்தநாள் அதுவும் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!..
X

”நாட்டு நாட்டு” என ராம்சரணுக்கு போட்டியாக நடனமாடி ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட வைத்த நடிகர் ஜூனியர் என்டிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்ககளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தான் நடித்துள்ள வார் 2 படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பிற்கும் தனக்கு கிடைத்த வாழ்த்துகளுக்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.

ஜுனியர் என்டிஆர் சிறுவயதில் பிரம்மரிஷி விஷ்வாமித்ரா மற்றும் ராமாயணம் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் நின்னு சூடாலனி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ஸ்டூடன்ட் நம்பர் 1 , ஆதி, சிம்ஹாத்ரி, யமதோங்கா , தெம்பர் , ஜனதா கேரேஜ் , அரவிந்த சமேதா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தெலுங்கு திரையுலகில் “மேன் ஆஃப் மாஸஸ்” என்று அழைக்கப்பட்டார்.


என்.டி. ராமாராவின் பேரன் தான் ஜூனியர் என்டிஆர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். தாத்தாவின் பெயரை வைத்துக் கொண்டதை போல அவரது புகழுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் டோலிவுட் மட்டுமின்றி அடுத்ததாக பாலிவுட்டிலும் ஆட்சி செய்ய ‘வார் 2’ படத்தின் மூலம் கிளம்பி விட்டார்.

ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான வார் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி கபூர் நடித்திருந்தார். அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகி வரும் வார் 2 படத்தில் கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்துள்ளார். வில்லனாக ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளார். அதன் தமிழ் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் அடையச் செய்துள்ளது.

கடைசியாக ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடித்த தேவரா திரைப்படம் விமர்சன ரீதியாக அடிவாங்கிய நிலையில், வார் 2 ஜூனியர் என்டிஆருக்கு கை கொடுக்கும் என்கின்றனர். பிரசாந்த் நீல் உடன் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் படம் தான் அவருக்கு ரியல் கம்பேக்காக இருக்கும்.

Next Story