ஜூனியர் என்டிஆர்-ஐ முடிச்சு விட்ட தேவரா... மொத்தமே இவ்வளவுதான் வசூலா...?
தெலுங்கில் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், சைபாலிகான், பிரகாஷ்ராஜ், ஜான்விகபூர், முரளி ஷர்மா உள்ளிட்டவர் நடிப்பில் வெளியான திரைப்படம் தேவரா. இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் திரைக்கு வந்த முதல் நாளில் 172 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் சார்பாக தகவல் வெளியானது. இது ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.
முதல் நாளை தொடர்ந்து இரண்டாவது நாள் பெருமளவு இந்த திரைப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தது. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை வந்த வசூல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரவில்லை என்று கூறப்படுகின்றது. ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை பெருமளவு தேவரா திரைப்படம் திருப்தி படுத்தவில்லை என்று கூறி வருகிறார்கள். மேலும் இயக்குனர் கொரட்டலா சிவா முதல் பாகத்தின் கதையை கோட்டை விட்டுவிட்டார் என்றும், இப்படத்தின் இரண்டாவது பாகத்துக்காக மற்றொரு 300 கோடியை செலவு செய்வது என்பது வீண் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
தேவரா திரைப்படம் முதல் நாளில் 172 கோடி ரூபாய் வசூல் என்று கூறப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது நாளில் 243 கோடி ரூபாய் வசூல் என்று தகவல் வெளியாகியிருக்கின்றது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை 304 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. ஆனால் இது அனைத்தும் பொய் என்று ஹேட்டர்கள் கூறி வருகிறார்கள். திங்கட்கிழமையான நேற்று இந்தியாவில் வெறும் 12.5 கோடி ரூபாய் தான் தேவரா திரைப்படம் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
இதனால் தேவரா திரைப்படம் சுமார் 68% வீழ்ச்சியை சந்தித்திருப்பதாக கூறப்படுகின்றது. இந்தியாவில் இதுவரை தேவரா திரைப்படம் 173.1 வசூலை ஈட்டி இருப்பதாகவும், உலக அளவில் 320 கோடி ரூபாய் வசூலை ஈட்டி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சம் 400 கோடி வசூலையாவது தேவரா திரைப்படம் எட்டுமா? என்று தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.