கே.பாலசந்தரும் அப்படிப்பட்டவரா? அவர் எடுத்தது படமா? பிரபல எழுத்தாளர் சொன்ன தகவல்

by rohini |
balachander
X

தமிழ் சினிமாவில் பல்வேறு காவிய படைப்புகளாக தன் படங்களின் மூலம் வெளியிட்டவர் இயக்குனர் கே.பாலசந்தர். இயக்குனர் சிகரம் என்றே இவரை அனைவரும் அழைத்து வந்தனர். இவரால் அறிமுகப்படுத்த பட்ட பல பேர் இன்று தமிழ் சினிமாவில் பெரிய பெரிய ஆளுமைகளாக இருக்கிறார்கள். அதற்கு உதாரணமாக கமல் மற்றும் ரஜினியை சொல்லலாம்.

இந்த நிலையில் பாலசந்தரை பற்றி சமீபகாலமாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. பிரபல பாடகி சுசித்ரா கே. பாலசந்தர் சாகும்வரை லஸ்டிங் உணர்வோடுதான் இருந்தார் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதை சொல்லிவிட்டு அப்படியே அந்த பேட்டியில் கடந்துபோயிருப்பார் சுசித்ரா. ஆனால் அது இப்போது பூதாகரமாகியுள்ளது. உண்மையிலேயே பாலசந்தர் அப்படிப்பட்டவர்தானா என்பதை பற்றி பிரபல எழுத்தாளரான கிருஷ்ணவேல் கூறியிருக்கிறார்.

கிருஷ்ணவேல் கூறும் போது முதலில் சினிமாவில் பெண்கள் எப்படி நடிக்க வந்தார்கள் என்பதன் வரலாறை கூறியிருந்தார். அதாவது நாடகத்துறைதான் முதலில் இருந்தது. நாடகத்தில் பெண்கள் நடிக்க முதலில் தயங்குவார்கள். அதனால் ஆண்கள்தான் பெண் வேடத்தில் நடித்து வந்தனர். அந்தக் காலத்தில் பெண்கள் சில பேர் தேவதாசிகளாக இருந்து வந்தனர்.

தேவதாசி ஒழிப்பு வந்ததும் சரி படங்களில் நடிக்கலாம் என அவர்கள்தான் முதலில் நாடகத்திற்குள் வந்தனர். ஏனெனில் தேவதாசிகளாக இருந்தவர்களுக்கு நடனம் ஆட தெரியும். பாட்டு பாட தெரியும். பல ஆண்களுடன் பழகியவர்கள். அதனால் அவர்களால் நாடகங்களில் நடிக்க முடிந்தது. இப்படித்தான் படிப்படியாக பெண்கள் நடிக்க வந்தனர். ஏற்கனவே ருசிகண்ட பூனையாக இருந்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எல்லாருமே இப்படி நடிக்க வந்த பெண்களை பாலியல் ரீதியாக தன் வலையத்திற்குள் சிக்க வைத்தனர்.

இதுதான் அட்ஜெஸ்ட்மெண்ட்டாக மாறியது. இதில் பாலசந்தரை பற்றி சுசித்ரா சொன்னது உண்மையா என்று யோசித்தால் இருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் அவர் எடுத்த படங்களே முதலில் குப்பை படங்கள்தான். அதை போய் காவியமாக கொண்டாடி வந்தனர் நம்மூர் மக்கள். அவள் ஒரு தொடர்கதை படத்தில் என்னத்த சொல்லிட்டார் பாலச்சந்தர். பெண்கள் வேலைக்கே போகாமல் வீட்டிலேயேதான் இருக்க வேண்டும் என்பதை மறைமுகமாக சுட்டிகாட்டியிருப்பார்.

சிந்துபைரவி படத்திலும் மனைவியை விட்டுவிட்டு வேறொருத்தியுடன் கூத்தடிக்கும் ஒரு கதைதான். ஒருத்தன் எழுதும் போதோ படைப்பை உருவாக்கும் போதோ அவருடைய சிந்தனையில் என்ன தோன்றுகின்றதோ அதுதான் படமாக வரும். அப்படி கலைஞர் கருணாநிதியின் பராசக்தி படத்தில் முழுவதும் முற்போக்கு கருத்துக்களை அள்ளி வீசியிருப்பார். கருணாநிதி ஒரு முற்போக்குவாதி.

ஆனால் மன்மதலீலை படத்தில் பார்த்தால் என்ன இருக்கும். பல பெண்களை சீரழித்து பெண்களின் வாழ்க்கையில் விளையாடும் ஒருவனின் கதையாக அந்தப் படம் இருக்கும். அப்போ பாலசந்தரின் மனதில் என்ன மாதிரியான ஓட்டங்கள் இருந்திருக்கின்றன என்பதை பாருங்கள். இப்படியெல்லாம் பார்க்கும் போது சுசித்ரா பாலசந்தரை பற்றி சொன்னது உண்மையாக இருக்கும் என்றே தெரிகிறது. ஏன் ஸ்ரீவித்யாவுடன் பாலசந்தருக்கு நெருக்கம் இருந்ததாகவும் ஒரு செய்தி இருக்கிறதே என இந்த முழு தகவலை கிருஷ்ணவேல் கூறினார்.

Next Story