வணங்கானை தாண்டிய காதலிக்க நேரமில்லை!.. 9 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா?!...

by Murugan |   ( Updated:2025-01-22 12:16:04  )
kadhalikka
X

Kadhalikka Neramillai: இந்த பொங்கலுக்கு ஷங்கரின் கேம் சேஞ்சர், பலாவின் வணங்கான் ஆகிய 2 படங்களும் 10ம் தேதி ஜனவரி வெளியானது. 12ம் தேதி சுந்தர் சி இயக்கி 12 வருடங்கள் வெளியாகாமல் இருந்த மதகஜராஜா படம் வெளியானது. அதேபோல், உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கி ஜெயம் ரவி, நித்யா மேனன் உள்ளிட்ட பலரும் நடித்து 14ம் தேதி வெளியானது.

கேம் சேஞ்சர்: இந்தியன் 2 படம் சரியாக போகாததால் ஷங்கருக்கு கேம் சேஞ்சர் படத்தின் வெற்றி தேவையாக இருந்தது. இந்த படத்தில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தை சுமார் 450 கோடி பட்ஜெட்டில் தில் ராஜு தயாரித்திருந்தார். ஆனால், இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.


எனவே, இப்படம் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் சேர்த்து 130 கோடியும், வெளிநாடுகளில் 50 கோடியும் என மொத்தம் 180 கோடியை மட்டுமே வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. படம் வெளியாகி 12 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இனிமேல் இப்படத்தின் வசூல் அதிகரிக்காது. எனவே, இப்படம் ஒரு தோல்விப்படமாகவே அமைந்து ஷங்கரை அப்செட் ஆக்கிவிட்டது. இனிமேல் இந்தியன் 3 படத்தையே ஷங்கர் நம்பியிருக்கிறார்.

வணங்கான்: அடுத்து பாலாவுக்கும், அருண் விஜய்க்கும் ஒரு வெற்றி தேவைப்பட்டது. இந்த நிலையில்தான் அவர்களின் கூட்டணியில் வணங்கான் படம் வெளியானது. பிதாமகன் சித்தன் மற்றும் நந்தா சூர்யாவை மிக்ஸ் பண்ணி ஒரு கதாபாத்திரத்தை பாலா உருவாக்கியிருந்தார். இந்த படத்தில் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தது. இப்படம் வெற்றி என்றும் படக்குழு அறிவித்தது.


மதகஜராஜா வசூல்: சிலரோ வணங்கான் வெற்றிப்படமெல்லாம் இல்லை. வெற்றிப்படம் போல காட்டுகிறார்கள் என்று சொன்னார்கள். ஒருபக்கம், மதகஜராஜா படம் சூப்பர் ஹிட் அடித்து 10 நாட்களில் 40 கோடி வரை வசூல் செய்து தமிழ் சினிமாவை காப்பாற்றி இருக்கிறது. அதேபோல், ஜெயம்ரவியின் காதலிக்க நேரமில்லை படமும் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்றே பலரும் நினைத்தார்கள்.

ஆனால், இந்த படம் வணங்கானை விட அதிக வசூல் செய்திருக்கிறது. வணங்கான் படம் 12 நாட்களில் 7.93 கோடி வசூலித்திருக்கும் நிலையில், காதலிக்க நேரமில்லை அப்படம் 9 நாட்களில் 8.56 கோடி வசூல் செய்திருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் இப்படம் 15 கோடி வரை வசூல் என கணிக்கப்படுகிறது.

Next Story