கூலி பட ரிசல்ட்!… கைதி 2-வுக்கு வந்த சிக்கல்… ஐயோ பாவம் லோகேஷ்..
Coolie: மாநகரம் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக மாறியவர் லோகேஷ் கனகராஜ். ஒரு குறும்படத்தை மட்டும் இயக்கியவரை எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் நம்பி படம் இயக்கும் வாய்ப்பை கொடுத்தது. அப்படி உருவான மாநகரம் திரைப்படம் ஒரு ஹிட் படமாக அமைந்ததோடு இப்படத்தை பலரும் பாராட்டினார்கள். எனவே அடுத்து அதே நிறுவனத்திற்கு கைதி படத்தை இயக்கினார் லோகேஷ். கார்த்தி நடித்திருந்த இப்படம் லோகேஷை கவனிக்க வைத்தது.
இந்த படமும் சூப்பர் ஹிட் அடிக்கவே விஜயை வைத்து மாஸ்டர், கமலை வைத்து விக்ரம், மீண்டும் விஜயை வைத்து லியோ ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறினார் லோகேஷ். மேலும் ரஜினியை வைத்து கூலி படத்தையும் இயக்கினார். கடந்த 14ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியாகி 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் உலகம் முழுவதும் இப்படம் 310 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான படம் 1000 கோடி வரை வசூல் செய்யும் என பலரும் சொன்னார்கள். அதற்கு காரணம் ரஜினியின் ஜெயிலர் படம் 610 கோடி வரை வசூல் செய்திருந்தது. ரஜினியும் லோகேஷும் கூட்டணி அமைத்ததால் கூலி படத்திற்கு பெரிய ஹைப் உருவானது. அதோடு இந்த படத்தில் நாகார்ஜுனா. சவுபின் சாகிர், அமீர்கான், உபேந்திரா என பலரும் நடித்ததால் எதிர்பார்ப்பு வேற லெவலுக்கு போனது. தமிழ் சினிமாவில் 1000 கோடி வசூல் செய்த முதல் படமாக கூலி இருக்கும் என பலரும் பேசினார்கள்.
ஆனால் படம் வெளியான பின் இப்படம் நிறைய நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. படத்தின் கதை திரைக்கதையை லோகேஷ் சரியாக அமைக்கவில்லை, நிறைய லாஜிக் ஓட்டைகள், படத்தின் நீளம், தேவையில்லாத கேமியோ கதாபாத்திரங்கள் என பலரும் விமர்சனம் செய்தார்கள். ஒரு பக்கம் கூலி படத்திற்கு சென்சார் போர்ட் ஏ சர்டிபிகேட்டை கொடுத்ததால் குடும்பத்தோடு படத்தை பார்க்க முடியாத நிலை பலருக்கும் ஏற்பட்டது.
இந்த படத்தின் வசூல் பாதிப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். கூலி படத்திற்கு லோகேஷ் வாங்கிய சம்பளம் 50 கோடி. அடுத்து ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள கைதி2 படத்தை இயக்கவிருக்கிறார் லோகேஷ். இந்த படத்திற்காக 75 கோடி வரை சம்பளம் பேசியிருக்கிறார் லோகேஷ். இதை கொடுக்க தயாரிப்பு நிறுவனமும் ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது. கூலி படத்தை முடித்த கையோடு வெளிநாட்டு வெளிநாட்டுக்கு சுற்றுலா போய்விட்டார் லோகேஷ்.
கூலி படத்திற்கு எதிர்பார்த்த வசூல் இருக்காது என்பதால் அது கைதி2 படத்திற்கு சிக்கலை உருவாக்கி இருக்கிறது. அதாவது லோகேஷ் கேட்ட 75 கோடி சம்பளம், அது இல்லாமல் படத்தின் பட்ஜெட் என கணக்குப் போட்டால் எங்கேயோ போகிறது. எனவே வெளிநாட்டிலிருந்து லோகேஷ் வந்தவுடன் அவரின் சம்பளத்தையும் படத்தின் பட்ஜெட்டையும் குறைக்க சொல்லி ட்ரிம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறதாம்
.
