கைதி படத்தின் கோஸ்ட் கனெக்‌ஷன் விக்ரமில் இணைச்சது எப்படி தெரியுமா? லோகேஷ் ஷேரிங்க்ஸ்!..

by AKHILAN |   ( Updated:2025-05-11 14:00:51  )
கைதி படத்தின் கோஸ்ட் கனெக்‌ஷன் விக்ரமில் இணைச்சது எப்படி தெரியுமா? லோகேஷ் ஷேரிங்க்ஸ்!..
X

Lokesh Kanagaraj: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சூப்பர் ஹிட் திரைப்படங்களான கைதி மற்றும் விக்ரம் இணைந்தது குறித்த சுவாரஸ்ய விஷயம் குறித்து தன்னுடைய சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார்.

மாநகரம் திரைப்படத்திற்குப் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் கைதி. இப்படத்தை பிரபல நடிகர் மன்சூர் அலிகான் லோகேஷ் எழுத ஆனால் அந்த படத்தில் எதிர்பாராத விதமாக ஹீரோவாக நடித்த கார்த்தி உள்ளே வருகிறார்.

பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் எடுக்கப்பட்டு வெளியான திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. படம் தாறுமாறு கேட்டு அடிக்க கோலிவுட்டில் லோகேஷ் கனகராஜ் ஆதிக்கம் அதிகரித்தது.

மிகப்பெரிய கமல் ரசிகர் ஆன இவருக்கு அடுத்த திரைப்படம் ஆக விக்ரமை இயக்க வாய்ப்பு கிடைத்தது. ரொம்பவே ஆர்ப்பாட்டம் இல்லாமல் அறிவிக்கப்பட்ட இப்படம் பரபரப்பாக உருவாகி கொரோனா கால விடுமுறைக்கு பின்னர் திரையரங்குகளில் முதல் திரைப்படமாக வீசாகி மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை செய்தது.

இப்படத்தின் முக்கிய வெற்றிக்கு காரணமாக சொல்லப்படுவது லோகேஷ் கனகராஜன் சினிமாட்டிக் யுனிவர் கான்செப்ட் தான். அந்த வகையில் தன்னுடைய கைதி மற்றும் விக்ரம் படத்தினை சரியான வகையில் இணைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தார்.

ஒருவேளை இது திட்டமிட்டு செய்யப்பட்டதோ என நினைக்கும் வகையில் எங்குமே பிசிறு தட்டாமல் அமைந்திருந்தது. ஆனால் தற்போது இதன் ரகசியம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். கைதி படத்தில் சாதாரணமாக ஒரு எழுதிய வார்த்தைகள் தான் அந்த கோஸ்ட் கதாபாத்திரம்.

பின்னர் விக்ரம் இயக்க இருப்பதாக முடிவு செய்யப்பட்ட பின்னர் அதை இணைக்கவும் பேச்சுவார்த்தை நடந்தது. இரண்டு திரைப்படங்களின் தயாரிப்பு நிறுவனமும் வேறு வேறு இருந்தாலும் பேசி உரிமை வாங்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தான் அப்படத்தையும் மறுபடியும் பார்த்து அதை விக்ரமில் இணைத்து இருக்கிறார் லோகேஷ்.

மேலும் கைது எழுதும்போது இப்படி ஒரு கனெக்ஷன் செய்யப் போகிறோம் என்ற ஐடியா அவருக்கு கிடையாதாம் எல்சியூ தொடங்கிய போது இரண்டு நிறுவனம் மட்டுமே உள்ளே இருந்தது தற்போத் 6 நிறுவனங்கள் இருப்பதாகவும் லோகேஷ் குறிப்பிட்டு இருக்கிறார்.

Next Story