
Cinema News
STR49 புரமோ வீடியோ அப்டேட்!.. வெளியான போட்டோ!.. சிம்பு ஃபேன்ஸ் செம ஹேப்பி!…
தனுஷை வைத்து பல படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில் ஆடுகளம், அசுரன் ஆக இரண்டு படங்களுக்கும் தனுஷுக்கு தேசிய விருது கிடைத்தது.
வெற்றிமாறன் எப்போது கூப்பிட்டாலும் கதையை கூட கேட்காமல் நடிக்க வருவார் தனுஷ். அந்த அளவுக்கு அவருக்கு வெற்றிமாறன் மீது அவ்வளவு நம்பிக்கை. தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமா அளவில் சிறந்த இயக்குனராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். அவரின் இயக்கத்தில் நடிக்க ஜூனியர் என்.டி.ஆர் போன்ற நடிகர்களே ஆசைப்படுவதுண்டு. ஒரு பிரமோஷன் விழாவுக்காக சென்னை வந்த ஜூனியர் என்டிஆர் ‘வெற்றிமாறன் சார்.. வாங்க நாம சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்’ என அன்பாக கோரிக்கையும் வைத்தார்.
சூரியை வைத்து விடுதலை, விடுதலை 2 ஆகிய இரண்டு படங்களை இயக்கிய வெற்றிமாறன் அடுத்து எந்த படத்தை துவங்க போகிறார் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. சூர்யாவை வைத்து வாடிவாசல் இயக்குகிறார் என சொல்லப்பட்டது. ஆனால் அவர் முழு கதையும் தயார் பண்ணாததால் அந்த படத்தில் நடிக்க சூர்யா மறுத்துவிட்டார். அடுத்து தனுஷ் பக்கம் போகலாம் என்றால் அவர் மற்ற படங்களில் பிஸியாக இருந்தார். எனவே வட சென்னை பேக்ட்ராப்பில் சிம்பு வைத்து ஒரு படம் பண்ண முடிவெடுத்தார் வெற்றிமாறன்.
வெற்றிமாறனுக்காக பார்க்கிங் பட இயக்குனர் படத்தில் நடிப்பதை விட்டுவிட்டு வந்தார் சிம்பு. சிம்புவும் வெற்றிமாறனும் இணைந்து உருவான படத்தை கலைப்புலி தானு தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. சிம்புவை வைத்து சில நாட்கள் புரமோ ஷூட் எடுத்தார் வெற்றிமாறன். ஆனால் சில காரணங்களால் பட வேலைகள் அப்படியே நிறுத்தப்பட்டது.
சிம்புவும் வெற்றிமாறனும் அதிக சம்பளம் கேட்டதால் தாணு படத்தை நிறுத்திவிட்டார் என செய்திகள் வெளியானது. அதன் பின் வெற்றிமாறனே முயற்சிகள் எடுத்து தாணுவிடமும், சிம்புவிடமும் பேசி சுமூக முடிவை எட்டினார். விரைவில் படத்தின் ஷூட்டிங் துவங்கவிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகும் என கலைப்புலி தாணுவே தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதோடு சிம்புவும் வெற்றி மாறனும் டப்பிங் ஸ்டுடியோவில் நிற்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இந்த செய்தி சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.