கலகலப்பு 3ல் மீண்டும் வெற்றிக்கூட்டணி… சுந்தர்.சியின் திடீர் பிளான்… அப்போ ஹிட்டு கன்பார்ம்…

by Akhilan |
Kalakalappu
X

Kalakalappu3: சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக இருக்கும் கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தின் பணிகள் தொடங்கி இருக்கும் நிலையில் இப்படத்தின் ஹீரோக்கள் குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பொதுவாக ஹிஸ்ட்ரி படத்தில் தான் பாகங்களாக படமாக்கப்பட்டு வருவது வழக்கம். அப்படங்கள் மட்டுமே பெரிய அளவில் ஹிட் கொடுக்கும். ஆனால் முதல் முறையாக சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ஒரு காமெடி படம் பாகங்களாக ரிலீஸ் ஆனாலும் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது.

2012ம் ஆண்டு வெளியான முதல் பாகத்தில் மிர்ச்சி சிவா மற்றும் விமலுடன் இணைந்து ஓவியா மற்றும் அஞ்சலி என நால்வர் கூட்டணியில் படம் மாஸ்ஹிட் அடித்தது. எங்குமே சோர்வில்லாமல் படத்தின் வெற்றிக்கு டயலாக்குகள் மிகப்பெரிய பக்க பலமாக அமைந்தது.

இதை தொடர்ந்து சுந்தர்.சி இரண்டாம் பாகத்தினை 2018ம் ஆண்டு வெளியிட்டார். ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி மற்றும் கேத்ரீன் தெரசா ஆகியோர் நடித்திருந்தனர். முதல் பாகத்தினை போல இல்லாமல் இருந்தாலும் படம் அதீத வெற்றி பெற்று சூப்பர்ஹிட் ஆனது.

இந்நிலையில் சமீபத்திய காலமாக சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகும் எல்லா படங்களுமே சூப்பர்ஹிட் வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் விஷால் நடிப்பில் 12 வருடம் கழித்து வெளியான மதகஜ ராஜாவும் கூட இணைந்தது. இதனால் தன்னுடைய ட்ரேட் மார்க் படமான கலகலப்பு 3 தொடங்க சுந்தர்.சி திட்டமிட்டு இருக்கிறார்.

முதற்கட்டமாக ஹீரோவாக கவினிடம் பேச அவர் தன் கைவசம் நிறைய படங்கள் இருந்ததால் கலகலப்பு 3ஐ நிராகரித்து விட்டார். இனி யாரையும் நம்பாமல் தன்னுடைய சூப்பர்ஹிட் ஹீரோக்களையே மீண்டும் களமிறக்க திட்டமிட்டு இருக்கிறார்.

அந்த வகையில் சுந்தர்சி இயக்கத்தில் வெளியாக இருக்கும் கலகலப்பு 3 படத்தில் ஹீரோவாக விமலையும், மிர்ச்சி சிவாவையும் மீண்டும் களமிறக்க முடிவெடுத்து இருக்கிறாராம். அப்படத்தின் பேச்சு வார்த்தைகள் நடக்கும் நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story