அப்பட்டமா சுந்தர்.சியை மாட்டிவிட்ட ஜீவா… கலகலப்பு3க்கு மூடுவிழா வச்சிட்டாரு போலயே!

SundarC: ஜீவா தன்னுடைய பேட்டியில் தற்போது நிறைய ஆச்சரிய விஷயங்களை தெரிவித்து இருக்கிறார். அதில் தற்போது இயக்குனர் சுந்தர்.சியை காலை வாரி விட்டு இருக்கும் விஷயமும் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் பாகங்களாக வரும் படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்ற லிஸ்ட்டில் முக்கிய இடம் கலகலப்புக்கு இருக்கிறது. அந்த வகையில் தற்போது கலகலப்பு 3 பாகத்தினை வேலைகள் நடந்து வருகிறது. சுந்தர்.சி தற்போது மூக்குத்தி அம்மன் 2 பாகத்தில் இணைந்து இருக்கிறார்.
இப்படத்தில் முதலில் கவினை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர் கால்ஷூட் பிரச்னையால் முடியாது என மறுத்துவிட்டாராம். அதை தொடர்ந்து மீண்டும் மிர்ச்சி சிவா மற்றும் விமலை வைத்து படத்தை இயக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் நடிகர் ஜீவா தன்னுடைய பேட்டியில் கலகலப்பு3 படம் குறித்து பேசி இருக்கிறார். அவர் கூறுகையில், கலகலப்பு3 ஐடியா மதகஜராஜா திரைப்படத்தின் ஒரு பகுதியில் இருந்து எடுக்கப்பட்டதாம். அப்படம் வெளியாகாது என்ற நினைப்பில் சுந்தர்.சி செய்திருக்கிறாராம்.
ஆனால் திடீரென மதகஜராஜா ரிலீஸ் செய்யப்பட கலகலப்பு 3 படத்தினை தற்போது மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. சுந்தர்.சி சார் என்னை ஹீரோவாக கலகலப்பு3ல் நடிக்க அழைத்தார். ஆனால் எனக்கு நிறைய படம் இருந்தது. அதனால் கேட்போம் என பெரிய சம்பளம் கேட்டேன்.
அவரும் வேண்டாம் அடுத்த வருடமே கலகலப்பு3 இயக்கி கொள்கிறேன் என்று சொல்லிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, தற்போது சுந்தர்.சி உடனே மூக்குத்தி அம்மன்2 படத்தின் வேலைகளை நடத்தி பூஜையும் பிரம்மாண்டமாக நடந்துள்ளது.
கலகலப்பு2ல் ஜீவா, ஜெய் முன்னணி வேடத்தில் நடித்து இருந்தனர். ஆனால் முதல் பாகத்தின் வெற்றியை இரண்டாம் பாகம் ரீச் தரவில்லை. இதனால் மூன்றாம் பாகம் இன்னும் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.