அதை மட்டும் செஞ்சீங்க உங்கள கொன்னுடுவேன்!.. கீர்த்தி சுரேஷ் மிரட்டிய மாநாடு பட நடிகை..
நடிகை கீர்த்தி சுரேஷ்: தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்திருக்கின்றார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இருக்கும் பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகையாக மாறினார். ஆரம்ப காலகட்டத்தில் கவர்ச்சி காட்டாமல் இருந்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் தெலுங்கு சினிமாவில் சற்று கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார்.
பின்னர் இவருக்கு பாலிவுட்டில் கதவுகள் திறக்க அங்கு கிடைக்கும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக கிளாமரில் புகுந்து விளையாடி இருக்கின்றார். தமிழ் சினிமாவில் அட்லீ இயக்கத்தில் உருவாகி இருந்த தெறி திரைப்படத்தின் ரீமேக் பாலிவுட்டில் பேபி ஜான் என்று எடுக்கப்பட்டிருக்கின்றது.
இந்த திரைப்படத்தில் சமந்தா கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கின்றார். இப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் அதில் படு கிளாமராக நடித்திருக்கின்றார். இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து போயிருக்கிறார்கள்.
கீர்த்தி சுரேஷ் திருமணம்: கீர்த்தி சுரேஷ் இவ்வளவு கிளாமராக நடித்திருக்கின்றார் என்கின்ற அதிர்ச்சி முடிவதற்குள் அடுத்ததாக தனது திருமண தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு ஷாக் மேல் ஷாக் கொடுத்தார். இவருக்கு திருமணமாகி ஒரு வாரமாக போகும் நிலையில் தற்போது வரை சமூக வலைதள பக்கங்களை திறந்தாலே இவரின் திருமண புகைப்படங்களும் அதில் கலந்து கொண்ட பிரபலங்களின் புகைப்படங்களும் தான் வைரலாகி வருகின்றது. நடிகர் விஜய், திரிஷா தொடங்கி பல பிரபலங்கள் கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார்கள்.
பேபி ஜான் ப்ரோமோஷன்: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது 15 வருட காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் வைத்து திருமணம் செய்து கொண்டார். முதலில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்ற நிலையில் அடுத்ததாக கிறிஸ்துவ முறைப்படி இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது.
திருமணம் முடிந்த கையோடு காதல் கணவரை தனியாக தவிக்க விட்டு விட்டு நேற்று மும்பையில் நடைபெற்ற பேபி ஜான் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கிளாமரான உடையில் தாலியுடன் கலந்து கொண்டிருந்தார். இந்த புகைப்படங்களும் சோசியல் மீடியாக்களில் அதிகம் வைரலாகி வந்தது.
கல்யாணி பிரியதர்ஷன்: தமிழில் மாநாடு திரைப்படத்தின் மூலமாக பிரபலமான கல்யாணி பிரியதர்ஷன் கீர்த்தி சுரேஷின் நெருங்கிய தோழி. இவர் கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு சென்றிருந்த நிலையில் அங்கு இயக்குனர் அட்லி அவரின் மனைவி பிரியா மற்றும் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படத்துடன் அவர் வெளியிட்டு இருக்கும் பதிவானது தற்போது பலரின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.
கொலை மிரட்டல்: உங்களது திருமணம் உங்களின் காதலை போல அழகாக இருக்கின்றது. நீங்கள் திருமணம் செய்து கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. திருமணத்தில் இருவருமே ரொம்பவும் அழகாக இருந்தீர்கள். உங்கள் திருமணத்தை பார்த்து நான் அழும் புகைப்படம் மட்டும் நீங்கள் ரிலீஸ் செய்தீர்கள் என்றால் உங்களை நான் கொன்று விடுவேன் என்று செல்லமாக திட்டி இருக்கின்றார். இந்த பதிவானதை தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.
Also Read : என் தம்பி சூர்யா எப்படிப்பட்டவன்!. அவன போய்!.. புலம்பி தள்ளிய சமுத்திரக்கனி!..