Robo Shankar: அதிகாலையில் ரோபோ சங்கருக்கு அட்வைஸ் செய்த கமல்… என்ன சொன்னாருன்னு பாருங்க!
திடீர் உடல்நலக்குறைவால் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார். இது திரையுலகையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவரைப் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் வந்தவண்ணம் உள்ளன.
ரோபோ சங்கர் இனி அவ்ளோதான்னு நினைக்கும்போது அவரது அபிமான இயக்குனர் கோகுல் சிங்கப்பூர் சலூன் என்ற ஒரு படத்தில் நடிக்க வைத்து ஹிட் கொடுத்தார். தொடர்ந்து தற்போது ஒரு படத்தில் நடித்து வருவது கண்டிப்பா கம்பேக் தான் என்றும் சமீபத்திய பேட்டியில் சொல்லி இருந்தார் ரோபோசங்கர். அதுல மேலும் என்னென்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க…
நமக்கு எத்தனையோ பேரு எண்டு கார்டு போடணும்னு சொன்னான். நான் அப்படி போட்டவன்கிட்ட எல்லாம் சொன்னேன். எடுத்துப் பார்றா என் ரெக்கார்டுன்னு. பிளைட் மூவ் ஆகும்போது ரன்வேல போகும். ரன் வே முடிஞ்சிடுச்சுன்னு நினைக்கும்போது அப்ப தான் அது டேக் ஆஃப் ஆகும். அது எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். அதுமாதிரி இது வேணாம்னு ஒதுக்கப்பட்ட குப்பைத் தொட்டியில இருந்துதான் நமக்குத் தேவையான கம்பி மாதிரி சில பொருள்கள் கூட கிடைக்குது. இதுவும் ஒரு இன்ஸ்பிரேஷன்.
எனக்கு ஆண்டவரே அமெரிக்காவுல இருந்து கூப்பிட்டாரு. எது எது சாப்பிடணும்? சாப்பிடக்கூடாது. ஊறுகாய் எல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு சொன்னாரு. எங்கே போனாலும் வீட்டு சாப்பாடை எடுத்துட்டுப் போங்கன்னு சொன்னாரு. அப்போ அவரு சொன்ன போது அவருக்கு அது காலைல 5 மணி.
நான் உடனே சும்மா இருக்காம வீட்டுல இருந்து தான் சாப்பாடைக் கட்டிட்டுப் போறேன். சாப்பாட மட்டும் இல்ல. கட்டுனதை மட்டும் இல்ல சார் கட்டுனதையும் சேர்த்துத் தான் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னேன். ஒரு 5 நிமிஷம் சிரிச்சாரு. காலையிலயே ஆண்டவரை 5 நிமிஷம் சிரிக்க வச்சிட்டோம். அது ஹேப்பின்னு சொல்லி இருக்கிறார் ரோபோ சங்கர்.
