இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு... கமல் செய்த தரமான சம்பவத்தைப் பாருங்க.!

பிரபல கன்னட நடிகரும், கமலின் தீவிர ரசிகருமான சிவராஜ்குமாருக்கு இன்று பிறந்த நாள். 40 ஆண்டுகளாக திரையுலகில் பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்று கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல் கன்னடம் குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதனால் படத்தைக் கர்நாடகாவில் திரையிட முடியாமல் போய்விட்டது. கமலை மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். அன்பு ஒரு போதும் மன்னிப்பு கேட்காது என்று கெத்தாகச் சொன்னார்.
தமிழில் இருந்து வந்ததுதான் கன்னடம் என்ற அவரின் குரலுக்கு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூட நீங்க என்ன மொழியியல் வல்லுநரா என்று கேள்வி எழுப்பினர். அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கமலுக்கு ஆதரவாக தமிழ்த்திரை உலகில் இருந்து ஒருவரும் குரல் கொடுக்கவில்லை. நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் மட்டும் ஆதரவு தெரிவித்தார்.
சரி படம் வரட்டும். அது சூப்பர்ஹிட்டாகி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தக் லைஃப் படமும் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை. மணிரத்னத்தையும், கமலையும் நெட்டிசன்கள் மீம்ஸ்களில் வச்சு செய்தனர்.
இது கலாச்சார சீரழிவு என பல்வேறு விமர்சகர்களும் தாளித்து எடுத்தனர். இந்த நிலையில் இன்று சிவராஜ்குமாருக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் கமல்.
சினிமா துறையில் 40 ஆண்டுகளை நிறைவு செய்தவர் சிவராஜ்குமார். அவருக்கும் தனக்கும் 50 ஆண்டுகள் பழக்கம். சிறு வயது முதலே நாங்கள் நல்ல நண்பர்கள். தொடர்ந்து காட்டி வரும் அவரது அன்பு தான் எதிர்பாராதது.
அவரது 40 ஆண்டுகால சினிமாவில் மாபெரும் நட்சத்திரமாக ஜொலித்துள்ளார். இனியும் அவர் சாதிக்கும் விஷயங்கள் மிகுந்த சந்தோஷத்தை அளிப்பதாகவும் கமல் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். அதுவும் கன்னடத்திலேயே பேசி அவரை வாழ்த்தி இருப்பது விசேஷம்.