அமரன் பட இயக்குனருக்கு அடிச்ச லக்.. எதிர்பாராத சம்பளத்தை கொடுத்து அசத்திய கமல்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:35:30  )

ரங்கூன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. இவர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து அமரன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி ரிலீஸ் ஆக வெளியாக இருக்கின்றது. இந்த படத்தை தயாரித்தது கமலின் ராஜ் கமல் நிறுவனம்.

இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஒரு ராணுவ அதிகாரியாக சிவகார்த்திகேயன் இந்த படத்தில் முதன்முதலாக நடித்திருக்கிறார். அதுவும் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து இந்த படம் தயாராகி இருக்கிறது.

படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி ரிலீஸ் ஆக வரும் 31ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதே தேதியில் ஜெயம் ரவி நடிக்கும் பிரதர் திரைப்படமும் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் பிளடி பெக்கர் திரைப்படமும் ஒன்றாக ரிலீசாக இருக்கின்றது.

இந்த நிலையில் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு இரண்டு பெரிய தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து அடுத்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு வந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதுவும் ஒரு பெரிய தொகையில் இவரை ஒப்பந்தம் செய்ய அந்த தயாரிப்பு நிறுவனங்கள் அணுகி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கு மத்தியில் அமரன் திரைப்படத்திற்காக ஆரம்பத்திலேயே ராஜ்குமார் பெரியசாமி எதிர்பார்க்காத ஒரு சம்பளத்தை கமல் வழங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது .ஒருவேளை அமரன் திரைப்படம் வெற்றியடைந்து விட்டால் ஏற்கனவே காத்திருப்பில் இருக்கும் அந்த இரு பெரிய நிறுவனங்களும் கமல் தந்ததை விட இன்னும் அதிக அளவில் சம்பளம் தந்து ராஜ்குமார் பெரியசாமியை ஒப்பந்தம் செய்ய முன் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கமலின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இப்படி ஒவ்வொரு தயாரிப்பாளரும் திறமை வாய்ந்த இயக்குனர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஏதாவது ஒரு வகையில் அவர்களுக்கு ஊக்க தொகையை கொடுத்து இன்னும் அவர்கள் மென்மேலும் உயர உதவ வேண்டும் என்று பல பேர் கூறி வருகிறார்கள்.

Next Story