இவர்தான் இனி அடுத்த வாரிசு போல.. மேடையில் பகிரங்கமாக சொன்ன கமல்

by ROHINI |   ( Updated:2025-05-17 15:00:32  )
kamal
X

kamal

கமல் மணிரத்னம் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் தக் லைஃப். நாயகன் திரைப்படத்திற்கு பிறகு மறுபடியும் இவர்கள் இணைந்திருக்கும் படம் தான் இது. அதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. படத்தில் கமலுடன் இணைந்து சிம்பு ,அசோக் செல்வன் ,திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .

படம் ஜூன் 5ஆம் தேதி ரிலீசாக இருக்கின்றது. இந்த நிலையில் இன்று படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கூஸ் பம்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆரம்பத்தில் அப்பா மகனாக காட்டிவிட்டு ட்ரெய்லரின் இறுதியில் கமலும் சிம்புவும் ஒருவரை ஒருவர் எதிர்த்து சண்டையிடும் மாதிரி காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதனால் இது எந்த மாதிரியான கதை என தெரியவில்லை. இதில் ரங்கராய சக்திவேலாக கமல் நடித்திருக்கிறார் .

ஒரு பக்கம் அபிராமியுடனும் டூயட் பாடுகிறார். இன்னொரு பக்கம் த்ரிஷா உடனும் கமல் டூயட் பாடுகிறார். இது எந்த மாதிரியான கேரக்டர் என்று தெரியவில்லை. ஆனால் சிம்புவின் நடிப்பு ட்ரெய்லரில் பார்க்கும் பொழுது அபாரமாக தெரிகிறது. கமலுக்கு சளைச்சவன் நான் இல்லை என்பதைப் போல கமலுக்கு இணையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சிம்பு.

கமல் சிம்பு இருவரை பொறுத்த வரைக்கும் இரண்டு பேருமே குழந்தை நட்சத்திரமாகவே தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று ஒருவருக்கொருவர் ஒரு உயர்ந்த இடத்தை அடைந்திருக்கின்றனர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சினிமா துறையில் கமல் கோலோச்சி வருகிறார். ரஜினி கமல் இவர்களுக்கு முன்பு எம்ஜிஆர் சிவாஜி என மாபெரும் ஆளுமைகள் இருந்தார்கள். எம்ஜிஆரின் அடுத்த வாரிசு யார்? சிவாஜியின் கலையுலக வாரிசு யார் என்பது மாதிரியான ஒரு கேள்வி அப்போதிலிருந்து எழுந்து வந்தது.

சந்தேகம் இல்லாமல் சொல்லலாம் சிவாஜியின் அடுத்த கலையுலக வாரிசு கமல் என்று. அதைப் போல ரஜினி கமல். இதில் அடுத்த ரஜினி யார்? அடுத்த கமல் யார் என்ற ஒரு போட்டியும் இருந்து வருகிறது. இதில் கமல் இன்று மேடையிலேயே மறைமுகமாக சொல்லி இருக்கிறார். இனி எனக்கு பிறகு இவர்தான் என ஒருவரை சுட்டிக்காட்டி இருப்பதைப் போல அவர் மறைமுகமாக சொல்லி இருக்கிறார்.

simbu

simbu

அவர் வேறு யாருமில்லை. சிம்பு. இன்று ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இனிமேல் ரங்கராய சக்திவேல் என்ற வசனத்தை சிம்புவை பார்த்து தொகுப்பாளர் ட்ரெயிலரில் உள்ளதை போல இனிமேல் நான் தான். அந்த வசனத்தை கொஞ்சம் சொல்ல முடியுமா எனக் கேட்டார். உடனே சிம்பு கொஞ்ச நேரம் யோசிக்க அருகில் இருந்த கமல் தாராளமாக சொல்லலாம் என கம்பீரத்துடன் கூற அரங்கமே அதிர்ந்தது. இதிலிருந்து கமலுக்கு பிறகு இனிமேல் நான்தான் என்பது போல அது மக்கள் மத்தியில் பதிந்து விட்டது.

Next Story