கமல் போட்ட கணக்கு... தக் லைஃப்ல நடக்குமா? துபாய்ல வரவேற்பு எப்படி?

by SANKARAN |   ( Updated:2025-05-26 07:29:15  )
strm kamal, manirathnam
X

தக் லைஃப் படத்தின் டிரெய்லர் தமிழ் சினிமா உலகையே புரட்டிப் போட்டுள்ளது. கமல், சிம்பு இருவரும் சேர்ந்து படத்தில் நடித்தது பெரிய எதிர்பார்ப்புக்குள் ஆகியுள்ளது. அது கமர்ஷியல் விருந்தாக அமையும் என தெரிகிறது என்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி. இதுகுறித்து மேலும் அவர் என்ன சொல்கிறார்னு பாருங்க.

டிரெய்லர் வரும்போது நான் துபாய்ல இருந்தேன். அங்கே டிரெய்லரைப் பார்த்ததும் ரொம்ப எதிர்பார்ப்போடு இருக்காங்க. எனக்குத் தெரிஞ்ச நண்பர் ஒருவரே அந்த டிரெய்லரை திரும்ப திரும்ப நல்லாருக்குன்னு பார்க்குறாரு. இவ்வளவுக்கும் அவரு யாருடைய ரசிகராகவும் இல்லை. தக்லைஃப் புரொமோஷனுக்காக ஒவ்வொரு ஊருக்கும் 2 முறை போறாங்க. அங்கே உள்ள மக்களைத் தனியா சந்திக்கிறாங்க. பிரஸ்மீட்னு தனியா வைக்கிறாங்க.

கமலும், மணிரத்னமும் நாயகன் படத்திற்குப் பிறகு இணைவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு. இதை சரியாகப் பயன்படுத்தி மார்க்கெட்டிங், புரொமோஷன் பண்ணனும்னு தயாரிப்பாளர் கமல் நினைக்கிறாரு.

என்னோட சீனை வேணா தூக்கிடுங்க. அவரோட சீனைத் தூக்காதீங்கன்னு சிம்புவுக்கு கமல் ரொம்ப முக்கியத்துவம் கொடுத்துருக்காரு. தக் லைஃப் படத்துல சிம்பு நடிக்க ஒத்துக்கொண்டதே பெரிய விஷயம். ஏன்னா அவரு நெகடிவ் கேரக்டர், வில்லனா நடிக்கிறாரு.


வேற யாரு இந்த மாதிரி கேரக்டருக்காக நடிக்கக் கூப்பிட்டாலும் மறுத்துருப்பாரு. ஆனா கமல் படம் என்பதால் ஒத்துக் கொண்டார். அதனால் அவருக்கு கூடுதலாக ஸ்கோப் கொடுக்கணும்னு கமல் நினைக்கிறாரு. அதனாலதான் பல விஷயங்களைப் படத்துல அவருக்காக வச்சிருக்காரு.

டிரெய்லர், டீசரை வைத்துப் படத்தைத் தீர்மானித்து விட முடியாது. டிரெய்லரைப் பார்க்கும்போது திரிஷா கமலுக்கு செகண்ட் ஹீரோயின் மாதிரி வர்றாங்க. சிம்புவோட எதுக்கு சேரலன்னு பலரும் கேட்குறாங்க. டிரெய்லர்ல வேணும்னே மிஸ்லீடு பண்றதுக்காக அப்படி ஒரு ஷாட்டைத் தூக்கிப் போட வாய்ப்பு இருக்கு.

ரசிகர்கள் இப்படி எல்லாம் நினைக்கும்போது படத்துல அது வேற மாதிரி இருந்தா அவங்களுக்கு சர்ப்ரைஸா இருக்கும். அதனால அப்படி ஒரு சர்ப்ரைஸ மணிரத்னம் கொடுப்பாருன்னுதான் நான் நினைக்கிறேன் என்கிறார் வலைப்பேச்சாளர் பிஸ்மி.

Next Story