உலக நாயகனை ஓடிடியில் அடைக்கிறதா?.. வீர சேகரன் ஆட்டம் தியேட்டரில் வெறியா இருக்கும்!.. சொல்றது யாரு?..

by saranya |   ( Updated:2024-10-04 03:30:39  )
உலக நாயகனை ஓடிடியில் அடைக்கிறதா?.. வீர சேகரன் ஆட்டம் தியேட்டரில் வெறியா இருக்கும்!.. சொல்றது யாரு?..
X

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 3 திரைப்படம் நேரடியாக போட்டியில் வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இது தொடர்பாக இதுவரை லைக்கா நிறுவனம் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை.

சினிமா வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக வலம் வரும் இந்தத் தகவல் முற்றிலும் வதந்தி என்றும் நாங்கள் அதை நம்பவே மாட்டோம் என்றும் கமல்ஹாசன் ரசிகர்கள் உறுதியாக உள்ளனர்.

இந்தியன் 3 திரைப்படம் உலக அளவில் திரையரங்குகளில் வெளியாகி வீரசேகரன் ஆட்டத்தை பார்க்கத்தான் போகிறது. இந்தியன் 2 படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்தவர்களே அந்தப் படத்தை பாராட்டத்தான் போகின்றனர். ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் மீது தங்களுக்கு அளவுகடந்த நம்பிக்கை இருப்பதாகவும் நடிகர் சூர்யா போல நேரடியாக ஓடிடியில் உலகநாயகன் தனது படத்தை வெளியிட மாட்டார் என்றும் கூறி வருகின்றனர்.

கொரோனா காலத்தில்தான் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஷங்கர் இயக்கி உள்ள பிரம்மாண்ட படமான இந்தியன் 3 திரைப்படத்தை தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

லைக்கா நிறுவனம் தற்போது ரஜினிகாந்தின் வேட்டையின் படத்தின் ரிலீஸ் விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நிலையில், அடுத்ததாக இந்தியன் 3, அஜித்தின் விடாமுயற்சி பற்றிய படங்களை எப்போ எப்படி வெளியிடலாம் என்கிற முடிவை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசனுக்கு இந்தியன் 3 திரைப்படம் மிஸ் ஆனால் கூட மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் அந்தப் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story