மன்னிப்புக் கேட்க முடியாது டி-ஷர்ட் முதல்!.. மன்னிப்பு கேளுங்க கமல் வரை!. இப்படி ஆகிப்போச்சே!

கமல்ஹாசன் நடிப்பில் இன்று வெளியான தக் லைஃப் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் படத்தை பார்க்க வந்த ரசிகர்களில் ஒருவர் "மன்னிப்பு கேட்க முடியாது" என ப்ரிண்ட் செய்த டி-ஷர்ட்டை போட்டு வந்தது தற்போது வைரலாகி வருகிறது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, நாசர், அபிராமி, அலி ஃபசல், ரோஹித் சரஃப், பாபுராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான தக் லைஃப் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.
கேங்ஸ்டர் பின்னணியில் உருவாக்கப்பட்ட இப்படத்தில் கமலுக்கு எதிராக சிம்புவும் அவரது ஆட்களும் சேர்ந்து சதி செய்வதும், த்ரிஷா, கமல் காதலிக்கும் பெண்ணாக இருந்தாலும் சிம்பு, த்ரிஷாவை கட்டாயப்படுத்தி தன்னுடன் வைத்திருப்பது, ஒரு கேங் வாரில் தன் தங்கையை தொலைத்து விட்டு தேடுவது என பல வகையாக கதையை கொண்டுச்சென்றிருந்தாலும் படத்தை ப்ரோமோஷன் செய்து எதிர்ப்பார்பை தூண்டி ஏமாற்ற்த்தை கொடுத்து விட்டனர்.

இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், “தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்” என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் படத்தை வெளியிட முடியாது என அறிவித்த நிலையில் அதற்கு கமல் தன் தாய் மொழியை விட்டுக்கொடுக்காமல் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.
மேலும், இன்று கோவையில் உள்ள அர்ச்சனா திரையரங்கில் தக் லைஃப் படத்தை பார்க்க வந்த ரசிகர்களில் ஒருவர் தனது டி-ஷர்ட்டில் ”மன்னிப்பு கேட்க முடியாது”, வி ஸ்டாண்ட் வித் கமல்ஹாசன் என ப்ரிண்ட் செய்து மொழி பிரச்னை தொடர்பாக கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அணிந்து வந்தது அனைவரையும் ஈர்த்தது.
கர்நாடகாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டாம், இப்படியொரு சுமாரான படத்தைக் கொடுத்ததற்காக தமிழர்களிடம் தான் கமல் மன்னிப்புக் கேட்க வேண்டும் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.