அமெரிக்காவிலிருந்தே பஞ்சாயத்த தீர்த்து வச்ச கமல்.. அடிபணிந்த ஷங்கர்!.. ஆனா ஒரு கண்டிஷன்..
Game Changer: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர். இந்த திரைப்படத்தை நேரடி தெலுங்கு படமாக இயக்கி இருக்கின்றார் இயக்குனர் சங்கர். ராம்சரணுடன் இணைந்து இப்படத்தில் கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது.
இந்த திரைப்படத்தை கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்திருக்கின்றார். ஆந்திராவில் இப்படத்திற்கு ஸ்பெஷல் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணி காட்சி மட்டுமல்லாமல் நள்ளிரவு ஒரு மணி காட்சிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்பெஷல் காட்சிக்கு அதிக விலைக்கு டிக்கெட் விலை விற்பனை செய்வதற்கும் அனுமதி கிடைத்துள்ளது.
படம் வெளியாவதற்கு இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் படக்குழுவினர் தொடர்ந்து புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இயக்குனர் சங்கர், நடிகர் ராம்சரண் மற்றும் எஸ்ஜே சூர்யா சேனல்களுக்கு பேட்டிகளை கொடுத்து வருகிறார்கள். நேரடி தெலுங்கு திரைப்படமாக உருவாக்கி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தை தமிழில் வெளியிடுவதற்கு சில பிரச்சினைகள் இருந்து வந்தது.
அதாவது லைக்கா நிறுவனம் இந்தியன் 3 திரைப்படத்தை சங்கர் முடித்து கொடுக்காமல் கேம் சேஞ்சர் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று திரைத்துறை கூட்டமைப்பில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த புகார் சுமூக முடிவை எட்டி இருக்கின்றது. அதாவது நடிகர் கமல்ஹாசன் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றார்.
தற்பொழுது அமெரிக்காவில் ஏஐ டெக்னாலஜியை படிப்பதற்காக சென்றிருக்கும் கமலஹாசன் அதனை முடித்துவிட்டு இயக்குனர் அன்பு அறிவு இயக்கத்தில் தான் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் டிஸ்கஷனில் ஈடுபட்டு இருக்கின்றார். அவர் ஜனவரி மாதம் இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில் இந்தியன் 3 படத்தை மையமாக வைத்து கேம் சேஞ்சர் திரைப்படத்தை வெளியிடுவதற்கு பிரச்சனை எழுந்திருப்பதால் அங்கிருந்து வீடியோ கால் மூலமாக லைக்கா மற்றும் சங்கர் உடன் பேச்சுவார்த்தை நடத்திய கமல்ஹாசன் தான் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் இந்தியன் 3 திரைப்படத்தில் நடித்துக் கொடுப்பதாக ஒப்புதல் வழங்கி இருக்கின்றார்.
அதை தொடர்ந்து இயக்குனர் ஷங்கரும் இந்தியன் 3 திரைப்படத்தை தற்போது எடுத்தவரை லைக்கா நிறுவனத்திற்கு போட்டுக் காட்டுவதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கின்றார். இதனால் கேம் சேஞ்சர் திரைப்படத்தை வெளியிடுவதற்கு கிரீன் சிக்னல் கிடைத்திருக்கின்றது. இருப்பினும் ஷங்கர் ஒரு கண்டிஷன் போட்டு இருக்கின்றாராம்.
தான் தற்போது வரை இந்தியன் 3 திரைப்படத்தில் எடுத்த காட்சிகளை போட்டு காட்டுகிறேன். ஆனால் மீதம் இருக்கும் காட்சிகளை இப்படித்தான் எடுக்க வேண்டும். இவ்வளவு பட்ஜெட்டில் தான் எடுக்க வேண்டும் என்கின்ற எந்த ஒரு கண்டிஷனும் தனக்கு போடக்கூடாது. என்னுடைய விருப்பப்படி என்னுடைய மேக்கிங் ஸ்டைலில் தான் மீதி படத்தை எடுப்பேன் என்று கூறியிருக்கின்றார். இதற்கு லைக்கா நிறுவனமும் சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.