ரஜினி சொல்லியும் கேட்காத கமல்!.. இந்தியன் 3 டேக் ஆப் ஆகுமா?…
Indian 3: ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து 1996ம் வருடம் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் இந்தியன்.
28 வருடங்கள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கினார் ஷங்கர். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்தது. இரண்டாம் பாகத்தை எடுக்கும் போது நிறைய காட்சிகளை ஷங்கர் எடுக்க மூன்றாம் பாதியையும் வெளியிடலாம் என திட்டமிட்டார்கள்.
இந்தியன் 2 புரமோஷன் விழாவில் பேசிய கமல் ‘நான் இந்தியன் 2வை நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணமே இந்தியன் 3-தான்’ என பேசி இருந்தார். அந்த அளவுக்கு அந்த படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் அவருக்கு பிடித்திருந்தது. இந்தியன் 2 படத்திற்காக பெரிய அளவில் புரமோஷனும் செய்யப்பட்டது. இந்த படத்தில் கமல், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்த இந்தியன் 2 ரசிகர்களை ஈர்க்கவில்லை. எனவே பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்தது. இந்தியன் 2 ஹிட்டடிக்கும்.. சில மாதங்களில் இந்தியன் 3-ஐ வெளியிடலாம் என திட்டமிட்டிருந்தனர். ஆனால் இந்தியன் 2 தோல்வியானதால் இந்தியன் 3 கிடப்பில் போடப்பட்டது. சில காட்சிகளும், ஒரு பாடல் காட்சியும் எடுக்க வே மட்டுமே வேண்டி இருக்கிறது.
இந்தியன் 2 தோல்வி என்பதால் ஷங்கரும், கமலும் அதை கண்டுகொள்ளவில்லை. எனவே, லைக்கா நிறுவனம் ரஜினியிடம் பேசி இந்தியன் 3 வெளிவர நீங்கள் உதவுங்கள் என கோரிக்கை வைத்தது. அவரும் ஷங்கர் மற்றும் கமலிடம் பேசியிருக்கிறார். அப்போது கமலும் ஷங்கரும் முன்பு பேசியதை விட அதிக சம்பளம் கேட்டதாக சொல்லப்பட்டது.
ஆனால் லைக்கா சுபாஸ்கரன் அதை ஏற்கவில்லை. எனவே ரஜினியின் முயற்சி தோல்வி அடைந்தது. தற்போது ஷங்கரே இறங்கி வந்து ‘15 நாட்கள் ஷூட்டிங் மட்டும் நடத்த வேண்டும்.. இதற்கு கமல் சார் வந்தால் படத்தை முடித்துக் கொடுக்கிறேன்.. டிசம்பரில் ரிலீஸ் செய்து விடலாம்’ என சொல்லிவிட்டாராம். ஆனால் கமலோ ஆர்வமில்லாமல் இருக்கிறார்.
ஒருபக்கம் இந்தியன் 3-ஐ கமல் முடித்துக் கொடுப்பார் என சிலர் சொல்கிறார்கள். எப்படி எனில் கமல் அடுத்து அன்பு-அறிவு இயக்கத்தில் நடிக்கவிருந்த திரைப்படம் தள்ளிப்போகிறது. அதேபோல் லோகேஷ் இயக்கத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த படமும் துவங்க எப்படியும் அடுத்த வருடம் பாதி ஆகிவிடும். எனவே அவர் இந்தியன் 3-யில் நடித்துக் கொடுப்பார் என்கிறார்கள்.
