ரஜினியுடன் கூட்டணி.. No பில்டப்.. ஒன்னும் சொல்ல மாட்டேன்!.. அலார்ட் ஆன கமல்ஹாசன்!…
Rajini Kamal: இப்போதெல்லாம் கமல், ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது அதிக அளவில் புரமோஷன் செய்கிறார்கள். படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள், ஒவ்வொரு பாடலாக வெளியிடுவது, டீசர், டிரெய்லர் வெளியிடுவது, படத்தின் இயக்குனரும், நடிகர்களும் பல ஊடகங்களிலும் பேட்டி கொடுப்பது, ஆடியோ லான்ச்சில் படத்தைப் பற்றி பெரிய பில்டப் செய்து பேசுவது, படத்தை பழமொழிகளிலும் ஹிட் அடிக்க வைக்க ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை வரை சென்று செய்தியாளர் சந்திப்பை நடத்தி புரமோஷன் செய்வது என பல விஷயங்களை செய்கிறார்கள். இதற்காகவே சில கோடிகளை தயாரிப்பாளர் செலவு செய்கிறார்.
நடிகர்கள் புரமோஷனுக்கு செல்லும்போது தனி விமானங்களை கேட்பது தனி கதை. ஆனால் அப்படி பெரிய அளவில் ஹைப் ஏற்றப்பட்டு ப்ரமோஷன் செய்யப்படும் படங்கள் திரையில் ரசிகர்களை திருப்திப்படுத்தி வசூலை அள்ளுகிறதா என்றால் பெரும்பாலும் இல்லை. கமல்ஹாசனின் இந்தியன் 2, தக் லைப் படத்திற்கும் பெரிய அளவில் புரமோஷன் செய்யப்பட்டது. பல கோடிகளை வாரி இரைத்தார்கள். பல ஊர்களுக்கும் சென்று பேசினார் கமல். ஷங்கர் ஊடகங்களில் பேட்டி கொடுத்தார்.
தக் லைப் படத்திற்காக கமல் பல ஊடகங்களிலும் பேசினார். ஒருபக்கம் மணிரத்னம் பேட்டி கொடுத்தார். ஆனால் இந்த இரண்டு படங்களுமே வெளியாகி ரசிகர்களை கவராமல் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்தது. எனவே எவ்வளவு பெரிய நடிகர்களின் படங்களாக இருந்தாலும் கதை நன்றாக இல்லை என்றால் பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்தாலும் படம் ஓடாது என்பது தற்போது பலருக்கும் புரிந்து இருக்கிறது.
பல வருடங்களாக சேராமல் இருந்த ரஜினியும் கமலும் தற்போது ஒரு படத்தில் இணைந்து நடிக்கப் போவதாகவும், அதை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது. ஆனால் அதை இதுவரை யாரும் அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை. ஆனால் நேற்று சென்னையில் நடந்த ஒரு விழாவில் கமல் இதை உறுதி செய்தார்.
அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் ‘ நீங்களும் ரஜினியும் பல வருடங்களுக்கு பிறகு இணைவது தரமான சம்பவமாக இருக்கும்’ என சொல்ல சுதாரித்த கமல் ‘ஒரு படத்தை தரமான சம்பவம் என ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும். படம் வருவதற்கு முன்பு சம்பவம் தரமாக இருக்கும் என எப்படி சொல்ல முடியும்? சில நேரங்களில் மக்கள் தரதரவனை இழுத்து விடுவார்கள். படத்தை நன்றாக எடுத்துவிட்டு காட்டுவோம்.. அவர்களுக்கு பிடித்திருந்தால் மகிழ்ச்சி’ என அடக்கி வாசித்திருக்கிறார்.
கமல் சொல்வதை பார்க்கும் போது ரஜினியும் கமலும் இணையும் படம் படத்திற்கு பெரிய அளவில் ஹைப் ஏற்றி ப்ரமோஷன் செய்யாமல் படத்தை வெளியிடுவார்கள் என்று கணிக்கப்படுகிறது
