ஆஸ்கர்லயும் விட்டுவைக்காத கமல்... தக் லைஃப் பரபர அப்டேட்

தக்லைஃப் படத்துக்கு சூட்டிங் முடிச்சாச்சு. இன்று வெளியான புரொமோவில் நெக்ஸ்ட் பேஸ்க்குப் போகுதுன்னு சொல்லி இருக்காங்க. இந்த வீடியோவில் மணிரத்னம் ஆக்ஷன்னு சொல்றாரு. அப்புறமா படத்தின் படப்பிடிப்பு நடந்த இடங்களைக் காட்டுறாங்க. கேமராவைத் தூக்கியபடி ஒருவர் செல்கிறார்.

படக்குழுவைக் காட்டுகிறார்கள். அப்புறம் கமல் திரும்பி நடக்கிறார். கடைசியாக மணிரத்னம் 'அண்டு இட்ஸ் எ ரேப்'னு சொல்றாரு. எல்லாரும் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். இதன்படி படப்பிடிப்பு முடிவடைந்தது என்பது உறுதியாகிவிட்டது.



இனிஅடுத்தகட்டமாக டப்பிங், எடிட்டிங், போஸ்ட் புரொடக்ஷன் ஒர்க் தான் பாக்கி. அந்த வேலைகளுக்குள் தக் லைஃப் போகப்போகிறது. படம் வரும் ஆண்டில் பொங்கல் நாளில் திரைவிருந்தாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இல்லாதபட்சத்தில் ஜனவரி 26 தான் ரிலீஸ் என்பது உறுதி. அதுவும் இல்லை என்றால் கடைசி வாய்ப்பாகத் தான் சம்மருக்கு படம் வெளியாகும் என்று தெரிகிறது. ஆனால் படத்தை ஜனவரியில் லாக் செய்துள்ளார்கள் என்பதே உண்மை.

உலகநாயகன் கமலும், மணிரத்னமும் 38 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது நாயகன் படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளார்கள். அந்தப் படம் தான் தக் லைஃப். அதனால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் வந்துள்ளன.

அது மட்டுமல்லாமல் கமலுடன் இணைந்து சிம்பு நடித்துள்ளார். இவருக்கு மிக முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கமலுடன் இணைந்து குத்தாட்டமும் போடுகிறாராம். வெறித்தனமான பைட் ஒன்றும் போட்டுள்ளாராம்.

படத்தில் ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக வந்துள்ளதாக மணிரத்னமே கூறிவிட்டாராம். அதன்படி இந்தப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதால் படக்குழு மட்டுமல்லாமல் கமல் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். இப்போதே 2025ம் ஆண்டு கமல் ஆண்டு தான் என்கின்றனர்.

படத்தின் வெற்றி இப்போதே உறுதிசெய்யப்படும் வகையில் ஓடிடிக்கான உரிமை எல்லாம் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே போயிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மீண்டும் இந்தக் கூட்டணி கம்பேக் கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆஸ்கர் நாமினேஷன்லயும் கமல் தான் ரெக்கார்டு பண்ணியிருக்கிறாராம். 7 படங்கள் அனுப்பப்பட்டுள்ளதாம். அடுத்து அமீர்கான். அவருக்கு 5 படங்கள் இதுவரை அனுப்பி இருக்காங்க. ஹேராம், இந்தியன், குருதிப்புனல், தேவர் மகன், நாயகன், சாகர், ஒரு கைதியின் டைரி என கமலின் 7 படங்கள் இதுவரை ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி கமல் படங்கள் சத்தம் போடாமல் ஒரு ரெக்கார்டை இன்றளவும் செய்து கொண்டு தான் இருக்கின்றன.

Related Articles
Next Story
Share it