1. Home
  2. Cinema News

நான்தான் உன்னை ஜெயிக்க வச்சேன்!… எனக்கே ஸ்கெட்ச் போடுறியா?… லோகேஷை லாக் செய்த கமல்..

நான்தான் உன்னை ஜெயிக்க வச்சேன்!… எனக்கே ஸ்கெட்ச் போடுறியா?… லோகேஷை லாக் செய்த கமல்..

கோலிவுட்டின் முக்கிய இயக்குனராக தற்போதைய இடம் பிடித்து இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து விட்டால் தங்களுடைய கேரியர் பாசிட்டிவாக நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என பலரும் நினைக்க தொடங்கி விட்டனர். மாநகரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்த லோகேஷுக்கு முதல் படமே பாசிட்டிவ்வாக அமைந்தது. அதை தொடர்ந்து கார்த்தியின் நடிப்பில் கைதி படத்தினை இயக்கி இருந்தார். ஒரே நாள் இரவில் நடக்கும் காட்சிகளாக விரிந்த அந்த படத்திற்கு இன்று வரை ரசிகர்கள் எக்கசக்கமாக இருக்கின்றனர். கார்த்திக்கு மிகப்பெரிய ப்ரேக்காக அமைந்தது இந்த படம். இதையும் படிங்க:  நான் எழுதின பாட்ட கண்ணதாசன்னு நினைச்சார் எம்.ஜி.ஆர்!. வாலி சொன்ன சீக்ரெட்!.. தொடர்ச்சியாக விஜய் அவருக்கு மாஸ்டர் பட வாய்ப்பினை கொடுத்தார். கமர்ஷியல் ஹீரோவான விஜயிற்கு வேறு அடையாளம் கொடுத்தவர். சிரித்த முகமாக வலம் வரும் விஜய் ஒரு குட்டி டெரராக சுற்றியதை பார்த்து அவரிடம் கவரப்பட்டது அவரின் ஹேட்டர்ஸும் தான். இந்த வெற்றியை தொடர்ந்து லோகேஷ் தன்னுடைய ஆஸ்தான நாயகனான கமலிடம் கதை சொல்லினார். ஒரு வெற்றிக்காக பல வருடம் ஏங்கி கொண்டு இருந்த கமலுக்கு அது பிடித்து போக உடனே புக்கானது தான் விக்ரம் படம். கமலை தொழுகும் அளவுக்கு ரசனை கொண்ட லோகேஷ் காட்சிகளை மெருகேற்றி இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். விக்ரம் பட மிகப்பெரிய வசூலை செய்தது. கமலிற்கு இரண்டாவது இன்னிங்ஸாகவே மாறியது. இதையும் படிங்க :  மகனை களம் இறக்கி விஜயின் கோபத்திற்கு ஆளான லைக்கா!.. அட இது அவருக்கே தெரியாதாம்!… பெரிய நாயர்கள் எல்லாம் தோற்ற நேரத்தில் வெற்றி வாகை சூடினார். இதையடுத்து மீண்டும் அவரை அழைத்த விஜய் தனக்கு அதே மாதிரி வேணும் எனக் கேட்க அவர் ஸ்டைலில் தற்போது லியோ உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்தியன் படத்தினை முடித்து விட்ட கமல் அடுத்து லோகேஷ் தன்னை இயக்க வேண்டும் என விரும்புகிறாராம். ஜெய்லர் மிகப்பெரிய வெற்றி என்பதால் அதை முறியடிக்க லோகேஷுடன் கூட்டணி அமைப்பதே கமலின் ப்ளானாக இருக்கிறது. ஆனால் லோகேஷோ தலைவர் 171ஐ இயக்க வேண்டும் என விரும்புகிறாராம். ஆனால் தன்னுடைய ஆஸ்தான நாயகனிடம் இதை சொல்லவும் தயக்கமாக இருக்கிறதாக கூறப்படுகிறது. இதனால் கமலா? ரஜினியா? என தற்போது லோகேஷ் தான் இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.  

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.