வா மோதி பார்ப்போம்!.. சண்டைக்கு ரெடியான கமல்!.. ஆனா சூப்பர்ஸ்டார் செஞ்சது வேற லெவல்!..

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நண்பர்களாக இருந்து வருவது ரஜினி - கமல் மட்டும். ரஜினி அறிமுகமான அபூர்வ ராகங்கள் முதல் இப்போது வரை இவர்களின் நட்பு பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதாவது, இவர்களின் நட்புக்கு வயது 49 வருடங்கள் ஆகும்.

சினிமா உலகில் என்னையும், ரஜினியும் போல நண்பர்கள் கிடையாது என ஒரு விழாவில் உரத்த குரலில் சொன்னார் கமல். கிட்டத்தட்ட 50 வருடங்கள் இருவரும் சினிமா உலகில் பயணம் செய்து வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், கமல் ரஜினிக்கு சீனியர். ரஜினி சினிமாவில் அறிமுகமாகும்போதே கமல் ஸ்டாராக இருந்தார்.

துவக்கத்தில் ரஜினியும், கமலும் இணைந்து படங்களில் நடித்தனர். அதன்பின் இருவரும் பேசி முடிவெடுத்து தனித்தனியாக நடிக்க துவங்கினார். கமலுக்கு போட்டி நடிகராக ரஜினி மாறினார். இன்னும் சொல்லப்போனால் வசூலில் நம்பர் ஒன் இடத்தையும் ரஜினி பிடித்தார்.

ஆனாலும், இப்போதும் கமலுக்கு ரசிகராகவே இருக்கிறார் ரஜினி. கமலின் அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட சில படங்களை பார்த்துவிட்டு நள்ளிரவில் நேரில் சென்று பாராட்டிவிட்டுதான் வீட்டுக்கு போனாரம் ரஜினி. இருவருக்குள்ளும் எப்போதும் மனஸ்தாபமோ, ஈகோவோ, காழ்ப்புணர்ச்சியோ வந்தது இல்லை.


கமல் மீது எப்போதும் நட்பு கலந்த மரியாதை வைத்திருப்பவர் ரஜினி. இப்போதும் ஏதேனும் சந்தேகம் என்றால் ரஜினி உடனே கமலிடம்தான் பேசுவார் என்பது பலருக்கும் தெரியாது. அதேநேரம், இருவருக்கும் ஒருமுறை சண்டை வந்திருக்கிறது. படப்பிடிப்பில் கமல் ஒன்று சொல்ல ரஜினி ஒன்று பேச இருவரும் அங்கிருந்து கோபமாக சென்றுவிட்டனர்.

அதன்பின், வேறொரு படப்பிடிப்பில் கமல் மேக்கப் அறையில் இருந்தபோது ரஜினி உள்ளே வந்திருக்கிறார். உள்ளே நுழைந்ததும் அவரின் ஸ்டைலில் பின்னால் பார்க்கமாலேயே கைகளால் கதவுக்கு தாழ்பாள் போட்டிருக்கிறார். ரஜினி நம்மிடம் சண்டை போடவே வந்திருக்கிறார் என நினைத்த கமல் ‘சரி ஒண்டிக்கு ஒண்டி.. யாரென பார்த்துவிடுவோம்’ என சண்டைக்கும் ரெடியாகி விட்டாராம்.

ஆனால், அருகில் வந்த ரஜினி ‘சாரி கமல். நான் அப்படி பேசியிருக்கக் கூடாது. என் மேல்தான் தப்பு’ என சொல்ல நெகிழ்ந்து போய்விட்டாராம் கமல். ‘ரஜினிக்கு தோன்றியதை நாம் ஏன் செய்யவில்லை?’ என தனக்குள்ளேயே கேள்வி கேட்டுக்கொண்டாராம். அதோடு சரி. அதன்பின் இருவரும் சண்டை போட்டுக்கொள்ளவே இல்லை.

Related Articles
Next Story
Share it